தற்சார்பு இந்தியா வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 535615 பேர் பயனடைந்துள்ளனர்

0
118

தற்சார்பு இந்தியா வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 5,35,615 பேர் பயனடைந்துள்ளனர்

சென்னை: தற்சார்பு இந்தியா வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகம் பேர் பயனடைந்துள்ளனர். இந்தப் பட்டியலில் குஜராத் இரண்டாம் இடத்தையும், கர்நாடகா மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளதாக மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணையமைச்சர் திரு.ராமேஸ்வர் தெலி மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியுள்ளார்.

மத்திய அரசின் இந்தப் பட்டியலின்படி டிசம்பர் 4-ந் தேதி  வரை தமிழ்நாட்டில் 12,803 நிறுவனங்கள் மூலம் 5,35,615 பேர் பயனடைந்துள்ளனர். 300 கோடியே 46 லட்சத்து 76,607 ரூபாய் அவர்களுக்கு பயனாக கிடைத்துள்ளது.