காதி மீண்டும் உலகளவில் செல்கிறது; அமெரிக்காவின் “படகோனியா” ஆடை வடிவமைப்பு நிறுவனம் அதன் ஆயத்த ஆடைகளுக்குக் காதி துணியை தேர்வு செய்துள்ளது

0
190

காதி மீண்டும் உலகளவில் செல்கிறது; அமெரிக்காவின் “படகோனியா” ஆடை வடிவமைப்பு நிறுவனம் அதன் ஆயத்த ஆடைகளுக்குக் காதி துணியை தேர்வு செய்துள்ளது

சென்னை: நீடித்து உழைப்பதற்கும், தூய்மைக்கும் அடையாளமான காதி, உலகளாவிய ஆடை வடிவமைப்புத் துறையில் பெரியதொரு முன்னேற்றத்தை அடைந்துள்ளது.  உலகளவில் முன்னணியில் உள்ள அமெரிக்காவின் ஆடை வடிவமைப்பு நிறுவனம் படகோனியா, ஆயத்த ஆடைகளை தயாரிப்பதற்கு கை நெசவால் உருவாக்கப்பட்ட காதித் துணியை இப்போது பயன்படுத்துகிறது.  ஜவுளித் துறையில் முக்கிய நிறுவனமான குஜராத்தின் அரவிந்த் மில்ஸ் மூலம் ரூ.1.08 கோடி மதிப்பிலான சுமார் 30,000 மீட்டர் காதித் துணியை படகோனியா கொள்முதல் செய்துள்ளது.
உலகம் முழுவதும் காதித் துணியை வர்த்தகம் செய்ய அகமதாபாதில் உள்ள அரவிந்த் மில்ஸ் நிறுவனத்துடன் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் 2017 ஜூலையில் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இதன்பிறகு, குஜராத்தின் காதி கைவினைஞர்களின்  கூடுதல் மனித நேரம் மட்டும் அதிகரிக்கவில்லை.  பிரதமரின் “உள்ளூர் பொருட்களுக்கு உலகளாவிய சந்தை” என்ற  பிரதமரின் கனவும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

படகோனியாவால் காதித் துணி கொள்முதல் செய்யப்பட்டதால் கூடுதலாக 1.80 லட்சம் மனித நேரப் பணி உருவாக்கப்பட்டது.  அதாவது காதி கைவினைக் கலைஞர்களுக்கு 27,720 மனித நாட்கள் வேலை கிடைத்தது.  2020 ஆம் ஆண்டு அக்டோபரில் அளிக்கப்பட்ட ஆர்டர் 2021 அக்டோபரில் அதாவது 12 மாதங்களில் நிறைவேற்றப்பட்டுள்ளது.