தமிழ்நாடு அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பின் மெட்ராஸ் மெட்ரோ ரவுண்ட் டேபிள் இந்தியா 95 மற்றும் மெட்ராஸ் மெட்ரோ லேடீஸ் சர்க்கிள் 70 ஆகியவற்றின் முயற்சியில் 23 லட்சரூபாய் மதிப்பிலான 2 வகுப்பறைகளை அமைச்சர் தா.மோ. அன்பரசன்,எம்பி டி.ஆர்.பாலு, எம.எல்.ஏ கருணாநிதி,மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், ரோஷன் குமார், பாயல் மேத்தா ஆகியோர் திரிசூலத்தில் திறந்து வைத்தனர்

0
136

திரிசூலம் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட  இந்த இரண்டு வகுப்பறைகளையும் அமைச்சர் தா.மோ. அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், எம்எம்ஆர்டி ரோஷன் குமார், எம்எம்எல் சி பாயல்மேத்தா உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.

இந்த புதிய வகுப்பறைகளை, முழு முயற்சி செய்து கட்டிக்கொடுத்த ரவுண்ட் டேபிள் இந்தியாவின் விஜயராகவேந்திரா, திவ்யா சேத்தன் உள்ளிட்டோரை அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் பாராட்டினர்.

இந்த 2 வகுப்பறைகளும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் தரமான கல்வியை உறுதி செய்யும் என்று கூறிய சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, எதிர்கால மாணவர்களின் நலனுக்கும் இது உதவும் என்றார். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வியில் 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு அறிவிப்பின் மூலம் மீண்டும் அரசுப்பள்ளிகள் மீது மக்கள் கவனம் செலுத்தி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

தரமான வகுப்பறைகளை உருவாக்குவதன் மூலம் அனைவருக்கும் சுய சிந்தனையை வளர்க்கும் தரமான கல்வி என்கிற குறிக்கோளுடன் செயல்பட்டு வருவதாக ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.