ஜிஎஸ்டி இழப்பீட்டிற்கான தொடர் கடனின் கீழ் ₹ 44000 கோடியை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்திய அரசு வழங்கியது

0
104

ஜிஎஸ்டி இழப்பீட்டிற்கான தொடர் கடனின் கீழ் ₹ 44,000 கோடியை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்திய அரசு வழங்கியது

சென்னை

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீட்டிற்கான தொடர் கடனின் கீழ் ₹44,000 கோடியை மாநிலங்கள் மற்றும் சட்டசபைகளுடன் கூடிய யூனியன் பிரதேசங்களுக்கு இந்திய அரசு இன்று வழங்கியது.

ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள ரூ 1,15,000 கோடியுடன் (2021 ஜூலை 15 அன்று வெளியிடப்பட்ட ரூ 75,000 கோடி மற்றும் 2021 அக்டோபர் 7 அன்று வெளியிடப்பட்ட ரூ 40,000 கோடி), சேர்த்து ஜிஎஸ்டி இழப்பீட்டிற்காக நடப்பு நிதியாண்டில் வழங்கப்பட்டுள்ள மொத்த தொகை ₹1,59,000 கோடி ஆகும்.

செஸ் வரி வசூலில் இருந்து இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டிற்கு கூடுதலாக மேற்கண்ட தொகை வழங்கப்பட்டுள்ளது.

இழப்பீட்டை எதிர்கொள்வதற்கான நிதியை கடன் வசதியின் மூலம் வழங்கும் ஏற்பாடுகளுக்கு அனைத்து மாநிலங்கள் மற்றும் (சட்டமன்றங்களுடன் கூடிய) யூனியன் பிரதேசங்கள் ஒப்புக்கொண்டுள்ளன.