சென்னை விமான நிலையத்தில் ரூ.1.41 கோடி மதிப்புள்ள 3.222 கிலோ தங்கம் பறிமுதல்

0
112

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.41 கோடி மதிப்புள்ள 3.222 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை, 29 அக்டோபர், 2021

சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் நடத்திய இரு வேறு சோதனைகளில், ரூ.1.41 கோடி மதிப்புள்ள 24 காரட் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

29.10.2021 அன்று வந்திறங்கிய விமான எண்.6இ-66-ல் சோதனையிட்டபோது விமானத்தின் கழிவறையில் உள்ள வாட்டர்ஹிட்டரின் உட்பகுதியில் கருப்பு நிற டேப்பால் சுற்றப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.30,85,290 மதிப்புள்ள 702 கிராம் எடையுள்ள 12 தங்கக் கட்டிகள் கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டது.

இதே போன்று விமான நிலைய கழிவறையின் குப்பைக் கூடையில் கிடந்த உள்ளாடையில் பசை வடிவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2.52 கிலோ எடையுள்ள ரூ.1.11 கோடி மதிப்புள்ள தங்கம் கைப்பற்றப்பட்டது. மொத்தத்தில் 3.222 கிலோ எடையுள்ள ரூ.1.41 கோடி மதிப்புள்ள தங்கம் கைப்பற்றப்பட்டு மேல் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் தெரிவித்துள்ளார்.