‘ஆன்வி.மூவி’: இந்தியாவின் எக்ஸ்க்ளூசிவ் ‘பே-பெர்-வியு’ ஓ.டி.டி. தளம் கோலாகலமாக தொடங்கியது!

0
312

‘ஆன்வி.மூவி’: இந்தியாவின் எக்ஸ்க்ளூசிவ் ‘பே-பெர்-வியு’ ஓ.டி.டி. தளம் கோலாகலமாக தொடங்கியது!

  • தியேட்டர்களில் உள்ளது போன்று, இனி விரும்பிய திரைப்படங்களுக்கு மட்டும் பணம் செலுத்தி பார்க்கலாம்!
  • சந்தாதாரராக வேண்டிய அவசியம் இல்லை; ஒரு படம் பார்ப்பதற்கான டிக்கெட் விலை ரூ. 20 -லிருந்து ஆரம்பமாகிறது!
  • தமிழ், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்களை தற்போது காணலாம்!
  • திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள், இணையத் தொடர்கள் போன்றவற்றை இந்த டிஜிட்டல் திரையரங்கில் எந்த முன்கட்டணமும் இன்றி தயாரிப்பாளர்கள் / படைப்பாளிகள் வெளியிடலாம்! 

சென்னை, திரைப்படம், குறும்படம், ஆவணப்படம், இணையத் தொடர் (Web Series) உள்ளிட்ட வீடியோ பொழுதுபோக்கு அம்சங்களை – திரையரங்குகளில் உள்ளது போன்று, விரும்பிய திரைப்படங்களுக்கு மட்டும் பணம் கொடுத்து பார்க்கும் வகையிலான, இந்தியாவின் எக்ஸ்க்ளூசிவ் ‘பே-பெர்-வியு ஓ.டி.டி.’ (Pay-per-view OTT – Over The Top) தளமான ‘ஆன்வி.மூவி’ (ONVI.MOVIE) எனும் டிஜிட்டல் திரையரங்கம், மார்ச் 5, 2021 முதல்  ஆன்வி.மூவி பிரத்யேக திரைப்பட முன்னோட்டம் நிகழ்ச்சி சென்னையில் சமீபத்தில் கோலாகலமாக தொடங்கியது.

‘ஆன்வி.மீடியா’ (ONVI.MEDIA) நிறுவனத்தின் ஒரு அங்கமாகிய ‘ஆன்வி.மூவி’ டிஜிட்டல் திரையரங்கைப் போன்று செயல்படும். இந்த ஓ.டி.டி. தளத்தில், தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் படங்கள் ஒளிப்பரப்பாகும். பிற இந்திய மொழிகள் மற்றும் உலக மொழிகளில் வெளியாகவுள்ள படங்களையும் விரைவில் திரையிடவுள்ளது, ‘ஆன்வி.மூவி’.

இந்நிகழ்ச்சியில் ஆன்வி.மூவியில் வெளியான “புல்லட் பாபா” மற்றும் “ஸ்வீட் பிரியாணி” திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்த நிகழ்ச்சியை மேலும் சிறப்பிக்கும் வகையில் ‘கைதி, மாஸ்டர்’ புகழ் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் ட்விட்டரில் “புல்லட் பாபா” திரைப்படத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து ட்வீட் செய்து தனது பங்களிப்பை அளித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் திரைத்துறை பிரபலன்களான நடிகர் விவேக் பிரசன்னா, தீபக் பரமேஷ், இயக்குனர் எழில் நம்பி, ‘ட்ரிப்’ பட தயாரிப்பாளர் பிரவீன்,’சிக்ஸர்’ பட தயாரிப்பாளர் தினேஷ் கண்ணன், திரு சி. காமராஜ் (ஐஏஎஸ்), திரு எஸ். கண்ணன் (ஐஏஎஸ்) மற்றும் பத்திரிகையாளர்கள் பங்கேற்றனர்.

‘நக்கீரன்’ கோபால் அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இது குறித்து அவர் கூறுகையில், ” ஆன்வி மூவியின் இந்த பெரிய முயற்சியை பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இவர்களின் இந்த ஆன்வி மூலம் பலக்கனவுகளுடன் வரும் இளைஞர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். திரையிடப்பட்ட இரண்டு படங்களும் மிகவும் நன்றாக இருந்தது. இவர்களுக்கு கிடைத்த இந்த இடம் நல்ல தொடக்கமாக அமையும். மேலும் ஆன்வி.மூவியில் மாத மாதம் பணம் கட்ட அவசியம் இருக்காது, விரும்பும் படங்களுக்கு மட்டும் குறைந்த கட்டணம் செலுத்தி பார்த்து கொள்ளலாம். தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டம் ஆன்வி சென்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.” என்று கூறி இரண்டு பட குழுவிற்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

ஆன்வி.மூவியில் வெளியாகும் படங்களை உலகளாவிய மக்கள் எந்தவித தடையுமின்றி விரும்பும் படங்களுக்கு மிகவும் குறைந்த கட்டணம் செலுத்தி பார்க்கலாம். மேலும் ஆன்வி.மூவியில் அடுத்தடுத்து திரைப்படங்கள், வலைத் தொடர்கள், மற்றும் குறும்படங்கள் வெளியிட பட தயாரிப்பாளர்களோடு ஒப்பந்தம் செய்து கொள்ளும் பணியில் தற்போது இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதில் வெளியாகும் படங்களின் கட்டணங்கள் அனைத்தும் நேரடியாக தயாரிப்பாளர்/இயக்குனரிடம் சேரும்படி செய்துள்ளனர். திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள் மற்றும் வலைத்தொடர்கள் போன்றவற்றை இந்த டிஜிட்டல் திரையரங்கில் எந்தவித முன்கட்டணமும் இன்றி தயாரிப்பாளர்கள் வெளியிடலாம். இதில் பிற இணையங்களை போன்று விளம்பரங்கள் இருப்பது கிடையாது. மேலும் இந்த ஆன்வி.மூவி நிறுவனம் விரைவில் இந்தியாவின் திரைப்படங்கள், குறும்படங்கள், இணைய தொடர்கள் மற்றும் பிற வகை தொடுப்புகள் வெளியிட விரும்பும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களின் விருப்ப தேர்வாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்வி.மூவி’யை வாடிக்கையாளர்கள் தங்களது மொபைல் போன், கம்ப்யூட்டர், லேப்டாப் அல்லது ஸ்மார்ட் டிவி என எந்த டிஜிட்டல் திரையிலும் பார்த்து மகிழலாம்.

ALSO READ:

‘ஆன்வி.மூவி’: இந்தியாவின் எக்ஸ்க்ளூசிவ் ‘பே-பெர்-வியு ஓ.டி.டி.’ தளம் மார்ச் 5 அன்று தொடக்கம்!