Tag: ISRO

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.சி41 ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.சி41 ராக்கெட்

Business, India, News, Press Releases, Tamilnadu
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.சி41 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான 'இஸ்ரோ' கடல்சார் ஆராய்ச்சிக்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 2 (IRNSS-1I) வரிசையிலான வழிகாட்டி செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகிறது. இந்நிலையில், இஸ்ரோ சார்பில் அனுப்பப்பட்டு வரும் வழிகாட்டி செயற்கைக்கோள் வரிசையில் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஐ செயற்கைக்கோளை சுமந்தப்டி பி.எஸ்.எல்.வி. சி41 ராக்கெட் இன்று அதிகாலை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. சுமார் 1.4 டன் எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி. சி 41 ராக்கெட் மூலம் அனுப்பி, புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்தால், ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1ஏ செயற்கைக்கோளுக்கு மாற்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிசாட் 6ஏ செயற்கைக்கோள் விண்ணில் பாய்ந்தது

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிசாட் 6ஏ செயற்கைக்கோள் விண்ணில் பாய்ந்தது

India, News, Tamilnadu
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிசாட் 6ஏ செயற்கைக்கோள் விண்ணில் பாய்ந்தது சென்னை: இஸ்ரோ தயாரித்துள்ள தொலைத்தொடர்புக்கு உதவும் ஜிசாட் 6ஏ செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.வி. எஃப் 08 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது. இஸ்ரோ தயாரித்துள்ள தொலைத் தொடர்புக்கு உதவும் ஜிசாட் 6ஏ செயற்கைக்கோளை இஸ்ரோ நிறுவனம் தயாரித்துள்ளது. இதனை, ஜி.எஸ்.எல்.வி. எஃப் 08 ராக்கெட் மூலம் ஏவுவதற்கான பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டின. https://twitter.com/ANI/status/979323340962877440 ஜிசாட் 6ஏ செயற்கைக்கோளை ஜி.எஸ்.எல்.வி. எஃப் 08 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் ஏவுவதற்கான 27 மணிநேர கவுன்ட் டவுன் நேற்று தொடங்கியது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை 4.56 மணிக்கு இந்த ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. வெற்றிக்கரமாக விண்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட் 6ஏ செய
பிஎஸ்எல்வி-சி40 ராக்கெட் ‘கவுன்ட் டவுன்’ இன்று தொடக்கம்

பிஎஸ்எல்வி-சி40 ராக்கெட் ‘கவுன்ட் டவுன்’ இன்று தொடக்கம்

India, News, Tamilnadu
பிஎஸ்எல்வி-சி40 ராக்கெட் 'கவுன்ட் டவுன்' இன்று தொடக்கம் pslv ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் சீறிப்பாய தயாராக உள்ள பிஎஸ்எல்வி -சி40 ராக்கெட். ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 31 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி 40 ராக்கெட் வெள்ளிக்கிழமை காலை 9.28 மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ளது. இதற்கான 24 மணி நேரக் 'கவுன்ட் டவுன்' வியாழக்கிழமை காலை தொடங்குகிறது. பிஎஸ்எல்வி -சி40 ராக்கெட்டில் 28 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் உட்பட 31 செயற்கைக்கோள்கள் அனுப்பப்படுகின்றன. இதன் மூலம் இந்தியாவின் 100 செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பிய சாதனையை இஸ்ரோ படைக்கவுள்ளது. பிஎஸ்எல்வி -சி39 ராக்கெட் மூலம் இந்தியாவின் வழிகாட்டி செயற்கைக்கோள் ஐஆர்என்எஸ்எஸ் -1எச் என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31 -ஆம் தே
சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் ​​உலக விண்வெளி வார விழா

சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் ​​உலக விண்வெளி வார விழா

Business, News, Press Releases, Tamilnadu
சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் ​​உலக விண்வெளி வார விழா​!  விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி​ இஸ்ரோவுடன் இணைந்து நடத்தப்பட்டது!! ​​விண்வெளி ஆய்வுகளை சிறப்பிக்கும் வகையில் சர்வதேச விண்வெளி வாரம் அக்டோபர் 4 முதல் 10 வரை ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய விண்வெளி ஆய்வு மையத்தை சார்ந்த சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம் சென்னை சத்யபாமா பல்கலைக் கழகத்துடன் இணைந்து இந்த வருடம் சர்வதேச விண்வெளி வாரத்தை கொண்டாடியது. தன்னுடைய முப்பதாவது ஆண்டு நிறைவு விழாவின் ஒரு பகுதியாக, வரும் அக்டோபர் 5 மற்றும் 6 தினங்களில் இந்நிகழ்ச்சியைக் பிரம்மாண்ட அளவில் கொண்டாடுவதில் சத்யபாமா பல்கலைக்கழகம் பெருமிதம் கொள்கிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நிகழ்ந்துள்ள பல்வேறு பயனுள்ள ஆய்வுகளை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியருக்கு பறைசாற்றும் வகையில் விழாக்களம் அமைக்கப்பட்டு இருந்தது.​ சர்வதேச விண்வெளி வாரம்