Cinema

எண்ணூர் கழிமுகத்தை உதாசீனித்தால் வட சென்னைக்கு ஆபத்து: கமல்ஹாசன் எச்சரிக்கை

எண்ணூர் கழிமுகத்தை உதாசீனித்தால் வட சென்னைக்கு ஆபத்து: கமல்ஹாசன் எச்சரிக்கை

Business, Cine News, Cinema, News, Press Releases, Tamilnadu
எண்ணூர் கழிமுகத்தை உதாசீனித்தால் வட சென்னைக்கு ஆபத்து: கமல்ஹாசன் எச்சரிக்கை தவறு நடந்த பின் அரசை விமர்சிக்காமல் இதோ வருமுன் காக்க ஓரு வாய்ப்பு. எண்ணூர் கழிமுகத்தை உதாசீனித்தால் வட சென்னைக்கு ஆபத்து. முழவிவரம் கீழே அரசியலில் களமிறங்கப் போவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ள நிலையில், வடசென்னைக்கு ஆபத்து வந்துள்ளதாகவும், அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும் என்று அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள தகவலில், `தவறு நடந்த பின் அரசை விமர்சிக்காமல் இதோ வருமுன் காக்க ஒரு வாய்ப்பு. எண்ணூர் கழிமுகத்தை உதாசீனித்தால் வட சென்னைக்கு ஆபத்து. கோசஸ்தலையாறு சென்னை அருகே இன்னும் முழுவதும் சாக்கடையாகாமல் மீனவர்களின் வாழ்வாதாரமாக உள்ளது. அது கூவம் அடையாற்ரைவிட பன்மடங்கு பெரிய ஆறு. அதன் கழிமுகத்தின் 1090 ஏக்கர் நிலத்தை சுற்றுச்சூழல் சிந்தனையில்லா சுய
தமிழக சினிமா வரலாற்றில் முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட ஒரே படம் ‘மரகதக்காடு’

தமிழக சினிமா வரலாற்றில் முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட ஒரே படம் ‘மரகதக்காடு’

Cine News, Cinema
தமிழக சினிமா வரலாற்றில் முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட ஒரே படம் 'மரகதக்காடு' இப்படத்தை அறிமுக இயக்குநர் மங்களேஷ்வரன் இயக்கியுள்ளார். ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரித்துள்ளார். அஜய், ராஞ்சனா , ஜெயஸ்ரீ மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன் ,ஜே.பி. மோகன். , ராமச்சந்திரன், பாவா லட்சுமணன் மற்றும் மலைவாழ் மக்கள் பலரும் நடித்துள்ளனர். இவர்கள் தவிர காடும் அருவியும் பிரதான பாத்திரங்களாய் படம் முழுக்க பயணித்துள்ளன . படம் பற்றி இயக்குநர் பேசும்போது, " அழிந்துவரும் காடு பற்றிய பொறுப்புடன் எடுக்கப்பட்ட படம். காடு, காடு தரும் பொருட்கள் தான் வாழ்க்கை என்றிருக்கும் காணி இன மக்கள், அவர்கள் வாழ்க்கை பற்றிப் பேசுகிற படம் இது . நாகரீகம், நகர விரிவாக்கம் என்கிற பெயரில் ரோடு விரிய விரிய காடு அழிக்கப்படும் அநீதி பற்றி படம் பேசுகிறது. மரகதக்காடு முழுக்க முழுக்க நடந்த உண்மைச் சம்பவத்தின்
“ஊடக நெருக்குதல்களால் கட்சி தொடங்க முடியாது!” : கமல்ஹாசன்

“ஊடக நெருக்குதல்களால் கட்சி தொடங்க முடியாது!” : கமல்ஹாசன்

Cine News, Cinema, News, Tamilnadu
“ஊடக நெருக்குதல்களால் கட்சி தொடங்க முடியாது!” : கமல்ஹாசன் ‘ஊடக உந்தல் கருதி கட்சியை அறிவிக்க முடியாது’ என ட்விட்டரில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் மத்திய, மாநில அரசுகளை வெளுத்து வாங்கும் கமல்ஹாசன், ‘பிக் பாஸ்’ மேடையில் அரசியல் பேசிவந்தார். அதுமட்டுமல்லாமல், வெளிநிகழ்ச்சிகளிலும் அரசியல் பேசினார். அவரின் வேகத்தைப் பார்த்து விரைவிலேயே அரசியலில் கமல் தீவிரமாக இறங்கலாம் என்று ஆவலோடு எதிர்பார்த்தனர். கமல்ஹாசனின் பிறந்தநாளான 7-ம் தேதி புதுக்கட்சி பற்றிய அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்த்த நிலையில், அன்றைய தினம் முக்கிய அறிவிப்பு இருக்கும் என ‘ஆனந்த விகடன்’ வார இதழில் தான் எழுதிவரும் தொடரில் குறிப்பிட்டிருந்தார் கமல்ஹாசன். ‘இளைஞர்படை ஒன்று காத்திருப்பதை என்னால் உணர முடிகிறது. அவர்களை ஒருங்கிணைக்க வேண்டிய கடமையும் தேவையும் எனக்கு வந்துவிட்டது. வரும் நவம்பர் 7ஆம் தேதி அவர்களுடன்
சொந்த வாழ்க்கையில் எளிமையாக இருக்கிறேன்: நடிகர் ரஜினிகாந்த்

சொந்த வாழ்க்கையில் எளிமையாக இருக்கிறேன்: நடிகர் ரஜினிகாந்த்

Cine News, Cinema
சொந்த வாழ்க்கையில் எளிமையாக இருக்கிறேன்: நடிகர் ரஜினிகாந்த் rajini 2.0 திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக துபைக்கு வியாழக்கிழமை வந்த நடிகர் ரஜினிகாந்த். அந்த திரைப்படத்தின் நாயகி எமி ஜாக்சன். எனது நிஜ வாழ்க்கையில் நடிக்க விரும்பவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் ரூ.400 கோடி செலவில் உருவாகி வரும் பிரம்மாண்டமான திரைப்படம் "2.0'. நடிகர் ரஜினிகாந்த், ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார், நடிகை எமி ஜாக்சன் ஆகியோர் இந்தத் திரைப்படத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தத் திரைப்படமானது, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25}ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா துபையில் வெள்ளிக்கிழமை (அக்.27) நடைபெறுகிறது. இதனை முன்னி
புது வருடம்.. புதிய பாதை : விமலை தயார்படுத்தும் ‘மன்னர் வகையறா’..!

புது வருடம்.. புதிய பாதை : விமலை தயார்படுத்தும் ‘மன்னர் வகையறா’..!

Cine News, Cinema
புது வருடம்.. புதிய பாதை : விமலை தயார்படுத்தும் ‘மன்னர் வகையறா’..! விமல் நடிப்பில் அடுத்ததாக வெளிவர தயாராகி வரும் படம் தான் ‘மன்னர் வகையறா’. இந்தப்படத்தை விமலின் சொந்த நிறுவனமான A3V சினிமாஸ் தயாரித்துள்ளது. அந்த அளவுக்கு விமலுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ள கதையம்சம் கொண்ட இந்தப்படத்தை, காமெடியுடன் கூடிய கமர்ஷியல் படங்களை தருவதில் கைதேர்ந்தவரான இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கியுள்ளார். விமல் ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்க முக்கிய வேடங்களில் பிரபு, சரண்யா, ரோபோ சங்கர், நாசர், யோகிபாபு, ஜெயபிரகாஷ், கார்த்திக் (யாரடி நீ மோகினி), சாந்தினி என ஒரு மாபெரும் நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் நடித்திருக்கின்றனர். குறிப்பாக ரோபோ சங்கருடன் விமல் புதிதாக கூட்டணி அமைத்திருப்பது படத்தின் ஹைலைட்டாக இருக்கும். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்ய ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடி
தடைகளை உடைத்து மீண்டும் சாதனை படைத்து வரும் மெர்சல்

தடைகளை உடைத்து மீண்டும் சாதனை படைத்து வரும் மெர்சல்

Cine News, Cinema
தடைகளை உடைத்து மீண்டும் சாதனை படைத்து வரும் மெர்சல் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான ‘மெர்சல்’ படம் அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சையை சந்தித்தாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மருத்துவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி பழிவாங்கும் கதையாக உருவாகி இருக்கும் இப்படத்தை ஸ்ரீ தேனாண்டான் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. தமிழகத்தில் வெளியாகிய சில நாட்களில் மத்திய-மாநில அரசுகளை தாக்கும் காட்சிகளும், வசனங்களும் படத்தில் இருப்பதாக எதிர்ப்பு கிளம்பியது. எனவே குறிப்பிட்ட அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. பின்னர் அதற்கும் ஒரு முடிவு எட்டப்பட்டது. இவ்வாறாக இந்த படத்திற்கு வந்த சோதனைகளுக்கு ஒரு முடிவு எட்டப்பட்டிருக்கும் நிலையில், ‘மெர்சல்’ படத்தின் தெலுங்கு பதிப்பான `அதிரிந்தி' படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்தது. அதன்படி வருகிற அக்டோபர் 27-ஆம் தேதி படம் வெளியாகும் எ
மெர்சல் படத்துக்கு ஆதரவு: விஜய் நன்றி!

மெர்சல் படத்துக்கு ஆதரவு: விஜய் நன்றி!

Cine News, Cinema
மெர்சல் படத்துக்கு ஆதரவு: விஜய் நன்றி! மெர்சல் படத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து நடிகர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, மெர்சல் திரைப்படம் தீபாவளி விருந்தாக வெளியாகி மக்களின் பாராட்டுகளுடன், நல்ல வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய வெற்றிப்படமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மாபெரும் வெற்றியடைந்துள்ள மெர்சல் திரைப்படத்திற்கு சில எதிர்ப்புகளும் வந்தன. இதற்கு பதில் அளிக்கும் வகையில் என் கலையுலகைச் சார்ந்த நண்பர்களான, நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், திரையுலக அமைப்புகளான தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், மற்றும் தேசிய அளவில் பிரபலமான அரசியல் தலைவர்கள், மாநில கட்சிகளின் தலைவர்கள், கட்சி பிரதிநிதிகள், பத்திரிக்கை, தொலைக்காட்சி, இணையதளம், பண்பலையை சேர்ந்த ஊடக நண்பர்கள், எனது நண்பா, நண்பிகள் (ரசிகர்கள், ரசிகைகள்) பொதுமக்கள்
கமல்ஹாசன் 7–ந்தேதி அரசியல் பிரவேசம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடுவாரா?

கமல்ஹாசன் 7–ந்தேதி அரசியல் பிரவேசம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடுவாரா?

Cine News, Cinema, News, Tamilnadu
கமல்ஹாசன் 7–ந்தேதி அரசியல் பிரவேசம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடுவாரா? சென்னையில் மாநாடு: நடிகர் கமல்ஹாசன் 7–ந்தேதி ரசிகர்களை சந்திக்கிறார்; அரசியல் பிரவேசம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும்? சென்னை, நடிகர் கமல்ஹாசன் அரசியலில் ஈடுபட தயாராகி வருகிறார். கேரள முதல்–மந்திரி பினராயி விஜயன், டெல்லி முதல்–மந்திரி கெஜ்ரிவால் ஆகியோரை சந்தித்து அரசியல் செயல்பாடுகள் குறித்து ஆலோசித்தார். சமூக பிரச்சினைகள் குறித்து டுவிட்டரில் கருத்துக்கள் வெளியிட்டு வருகிறார். அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து உள்ளது என்று குறை சொல்லி வருகிறார். நான் அரசியலுக்கு வந்து விட்டேன். கோட்டை நோக்கிய எனது பயணம் தொடங்கி விட்டது என்றும் பிரகடனம் செய்து இருக்கிறார். இதனால் அவர் எப்போது அரசியல் கட்சியை தொடங்குவார் என்ற பரபரப்பு நிலவுகிறது. கட்சிக்கு பெயர் தேர்வு செய்யும் பணிகள் ரகசியமாக நடப்பதாக தகவல் வெளியாகி உ