எல்கேஜி படிக்கும் மூன்றரை வயது மாணவன் விஸ்வந்த் 99 வகையான தமிழ் பூக்களின் பெயர்களை கூறும் வீடியோ வைரலாகி வருகிறது

0
193

எல்கேஜி படிக்கும் மூன்றரை வயது மாணவன் விஸ்வந்த் 99 வகையான தமிழ் பூக்களின் பெயர்களை கூறும் வீடியோ வைரலாகி வருகிறது

தஞ்சையை சேர்ந்த எல்கேஜி படிக்கும் மூன்றரை வயது மாணவன் விஸ்வந்த்
99 வகையான தமிழ் பூக்களின் பெயர்களை கூறும் வீடியோ தற்போது வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

குறிஞ்சி பாடலில் கூறப்பட்டுள்ள தொண்ணூற்று ஒன்பது தமிழ் மலர்களின் பெயர்களை வரிசையாக கூறி தஞ்சையை சேர்ந்த நான்கு வயது சிறுவன் அசத்தி வருகிறார்.

தஞ்சையை சேர்ந்த காசி விஸ்வநாதன் லாவண்யா தம்பதியினரின் மூன்றரை வயது மகன் விஸ்வந்த் இந்த சாதனையை செய்துள்ளார்.

குழந்தைகள் நாளையொட்டி கபிலர் இயற்றிய குறிஞ்சி பாடல் இடம்பெற்றுள்ள காந்தள், ஆம்பல், அனிச்சம், குவளை, குறிஞ்சி உட்பட தொண்ணூற்று ஒன்பது தமிழ் பூக்களின் பெயர்களை தொண்ணூறு வினாடிகளில் மழலை மொழியில் கூறி அசத்துகிறார்.