கிரி தனது முதல் கிளையை அமெரிக்காவில் நிறுவியுள்ளது

0
217

கிரி தனது முதல் கிளையை அமெரிக்காவில் நிறுவியுள்ளது

70 வருட பாரம்பரியமிக்க கிரி நிறுவனம் தற்போது கலிபோர்னியாவிலுள்ள ஸன்னிவேலில் தனது முதல் கிளையை நிறுவியுள்ளது. சிலிக்கான் பள்ளத்தாக்கிற்கு நமது பாரத கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் கொண்டு வருவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது.

சென்னை : பாரம்பரியம் மற்றும் ஆன்மீக பொருட்களின் விற்பனையில் முன்னிலை வகித்து வரும் கிரி நிறுவனம் தற்போது கலிபோர்னியாவிலுள்ள ஸன்னிவேலில் தனது முதல் கிளையை பிரம்மாண்டமாக நிறுவியுள்ளது என்பதை அறிவிப்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறது. அமெரிக்காவில் பரந்துபட்டிருக்கும் பாரத கலாச்சாரத்தின் மீது பற்று கொண்டவர்களுக்கும் புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கும் அனைத்துவித தரமான மற்றும் பல வகைப்பட்ட ஆன்மீக மற்றும் பாரம்பரிய பொருட்களும் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த விரிவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

70 வருடங்களுக்கு முன் நிறுவப்பட்ட கிரி நிறுவனம், உயர் தரமான ஆன்மீகப் பொருட்களை விரும்பி வருபவர்களுக்கு அவர்களது அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகவே ஆகிவிட்டது.  அமெரிக்காவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு பலதரப்பட்ட ஆதாரப்பூர்வமான பொருட்களை உடனுக்குடன் கொடுக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல் நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வேரூன்ற செய்வதுமே எங்களது நோக்கம். ஒவ்வொரு தனிநபர் மற்றும் குடும்பத்தினருக்கு தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளை பாரம்பரியம் மாறாமல் அதே தரத்துடன் அதிநவீன முறையில் வழங்குவதே கிரி இங்கு தடம் பதித்ததற்கான முக்கிய நோக்கம். கூடுதலாக எங்களின் வலுவான இ-வாணிபத்தின் மூலம் உலகளாவிய வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய முடிகிறது.

இந்த புதிய ஷோரூமில் வாடிக்கையாளர்களின் தேவைக்காக கிரியின் சொந்த படைப்புகளான புத்தகங்கள், பூஜை பொருட்கள், விழாக்கால பொருட்கள், கைவினைப் பொருட்கள், விக்கிரகங்கள், பொம்மைகள், யந்திரம் போன்ற பல தரமான பொருட்களை காட்சிப்படுத்தியுள்ளது. இதனால் அவர்களுக்கு தேவையான பொருட்களை அவர்கள் இருக்கும் இடத்திலேயே பெற முடியும்.

இத்தருணத்தில் கிரி Inc,. ன் CEO திரு. ரங்கநாதன் அவர்கள் பேசுகையில், ஐக்கிய மாநிலங்களில் கிரி தடம் பதித்தது  சிலிர்ப்பான அனுபவம் என்றும்  பாரதத்தின் உயர்ந்த பாரம்பரியத்தை ஒவ்வொரு தனி நபருடன்  இணைக்கும் குறிக்கோளில் குறிப்பிட்ட மைல் கல்லை அடைந்திருக்கிறது என்றும் கூறினார். 70 வருட சேவையில் பாரதத்தில் உயர்தரமான மற்றும் ஆதாரப்பூர்வமான பொருட்களை வழங்கி பெற்றுள்ள பூரண நம்பிக்கையை, அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கும் வழங்க கடமை பட்டுள்ளோம்.