சென்னையில் ஓர் ஓவிய சங்கமம்: 500 ஓவியர்கள் வரைந்த படங்கள்.. செம்மொழிப் பூங்காவில் குவிந்த மக்கள்…!

0
96

சென்னையில் ஓர் ஓவிய சங்கமம்: 500 ஓவியர்கள் வரைந்த படங்கள்.. செம்மொழிப் பூங்காவில் குவிந்த மக்கள்…!

சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் ஓவிய கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் 500க்கும் மேற்பட்ட ஓவியர்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தி உள்ளனர். இதனை பார்வையிட ஏரளமான பள்ளி குழந்தைகள் மற்றும் பொது மக்கள் வருகை தந்துள்ளனர்.

சென்னை செம்மொழி பூங்காவில் 500 ஓவியர்கள் வரைந்த ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றை செம்மொழி பூங்காவுக்கு வருகை தந்த பார்வையாளர்கள் பார்த்து ரசித்தனர். நடிகர்கள் முதல் இயற்கை ஓவியங்கள் வரை அதில் இடம் பெற்றிருந்தன.

சென்னை செம்மொழி பூங்காவில் இன்று ‘ஒரு நாள் ஓவிய சங்கமம் 2025’ என்ற பெயரில் 500-க்கும் மேற்பட்ட ஓவியர்கள், கைவினை கலைஞர்கள் பங்கேற்ற ஓவிய கண்காட்சி இரண்டாவது ஆண்டாக நடைபெற்றது.

இந்த ஓவிய கண்காட்சியை பொருத்தவரை சிறு சிறு பொம்மை ஓவியங்கள் முதல் இயல்பான மனிதர்களின் வாழ்வியல் சார்ந்த புகைப்படங்கள் என அனைத்து விதமான வகைகளிலும் குறிப்பாக ஆயில் பெயிண்டிங், அக்ரலிக் பெயிண்டிங், ரியல் எஸ்டேட் பெயிண்டிங், நவீனம், ஆதிகாலம் என அனைத்து வகைகளிலும் ஓவியர்களால் வரையப்பட்டு அவர்கள் காட்சிப்படுத்தியும் வைத்திருக்கின்றனர்.

அதுமட்டுமின்றி ஒரு சில ஓவியர்கள் நேரடியாக உடனுக்குடன் பென்சில் ட்ராயிங் மூலம் 10 நிமிடங்கள் முதல் அரை மணி நேரத்திற்குள் வரைந்து கொடுத்தனர். அதேபோல் மெஹந்தி ஃபேஸ் பெயிண்டிங் போன்றவையும் நேரடியாக செய்து கொடுக்கப்பட்டன. பெயிண்டிங் பென்சில் ட்ராயிங் மட்டும் இன்றி கலைநயம் மிக்க கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவற்றையும் தாங்கலாகவே செய்து அவற்றை காட்சிப்படுத்தி வைத்திருந்தனர்.

இந்த ஓவிய கண்காட்சியை ஏராளமான பள்ளி குழந்தைகள் மற்றும் பொது மக்கள் கண்டு களித்து வருகின்றனர்.