பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, பிரேசில்,ஜெர்மனி, மலேசியா, பிரான்ஸ், பாகிஸ்தான் உள்ளிட்ட 25 நாடுகள் பங்கேற்கும் 4வது மிஸ்டர் நேஷனல் யுனிவர்ஸ் போட்டி தாய்லாந்து நாட்டில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்கேற்க தமிழகத்தைச் சேர்ந்த சரத் மனோகரன் தேர்வாகியுள்ளார்
இவர் ஏற்கனவே 2020-21 க்கான ரூபாரு மிஸ்டர் சவுத் இந்தியா பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மிஸ்டர் நேஷனல் யுனிவர்ஸ் போன்ற உலகளாவிய போட்டியில் தமிழகத்தைச் சார்ந்த ஒருவர் பங்கேற்க இருப்பதை பலரும் பாராட்டி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் மே 29-2022 முதல் ஜூன் 6-2022 வரை நடைபெறும் போட்டியில் ஃபிட்னஸ் ரவுண்ட், டேலண்ட் ரவுண்ட், ஸ்டைலிங், மனோபாவம் மற்றும் நடத்தை, டிசைனர் வாக் ரவுண்ட், நீச்சல் உடை நடை சுற்று, மற்றும் க்யூ & ஏ ரவுண்டை தீர்மானிக்கும் இறுதி டாக்ஷிடோ உள்ளிட்ட பல்வேறு சுற்றுகளை கொண்டதாக போட்டி உள்ளது
இந்நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மற்றும் நடுவர் குழுவில் தான்யா சிரி விஜித்சோம்போங் (மிஸ்டர் நேஷனல் யுனிவர்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி), பட்டமபோர்ன், நடேர், அங்கனங் ஷகிரா மற்றும் விகாஸ் உஷாம் ஆகியோர் பங்கேற்கின்றனர்.