சென்னையில், சர்வதேச கூடைப்பந்து தகுதிப் போட்டி, இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவர் ஆதவ் அர்ஜுனா தலைமையில், நவம்பர் 22 ஆம் தேதி தொடங்கி  நடைபெற உள்ளது

0
190
சென்னையில், சர்வதேச கூடைப்பந்து தகுதிப் போட்டி, இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவர் ஆதவ் அர்ஜுனா தலைமையில், நவம்பர் 22 ஆம் தேதி தொடங்கி  நடைபெற உள்ளது.
சென்னை தாஜ் க்ளப் ஸவுஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியா விளையாட்டு வரலாற்றிலேயே சர்வதேச அளவிலான கூடைப்பந்து போட்டி முதன்முறையாக  தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது.
FIBA -ஆசிய கோப்பை தொடர் அடுத்த ஆண்டு (2025) தொடங்குகிறது.  இந்த தொடரில் பங்கேற்கும் அணிகளை தகுதிச்சுற்று மூலம் தேர்வு செய்து வருகின்றனர். அந்தவகையில் இரண்டாம் கட்ட தகுதிச்சுற்று போட்டிகள் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில், நவம்பர் 22 மற்றும் 25ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன.
இந்த தகுதிச்சுற்று போட்டிகளில்  ஆசிய கண்டத்தில் உள்ள தலைசிறந்த 24 நாடுகள் பங்கேற்று பலப்பரீட்சை நடத்துகின்றன. அதன்படி, கூடைப்பந்து வரலாற்றில் ஒரு மதிப்பு மிக்க போட்டியை கண்டு ரசிக்க ஒரு அரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது இந்த ஆசிய கோப்பை தகுதி சுற்று போட்டி.
இந்திய சீனியர் கூடைப்பந்து அணி பலம் வாய்ந்த கத்தார் அணிக்கு எதிராக நவம்பர்  22 ம் தேதியும், கஜகஸ்தான் அணிக்கு எதிராக 25ம் தேதியும்  சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க இந்த போட்டிகளை நேரில் வருகை தந்து கண்டு ரசிப்பதன் மூலம் நமது வீரர்களை ஊக்கப்படுத்துவதுடன் அடுத்த தலைமுறை வீரர்களையும் உருவாக்க வாய்ப்பாக அமையவுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் நடைபெறும் இந்த சர்வதேச போட்டிகள் மாநிலத்திற்கு கூடுதல் மதிப்பையும் பெற்றுத் தரும் என்பதும் குறிப்பிடத் தக்கது.
 கடைசியாக 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற FIBA மகளிர் ஆசியக் கோப்பைக்கு பிறகு ஆடவர் சர்வதேச போட்டி முதன்முறையாக சென்னையில் நடைபெறுவது ஒரு பெருமை மிகு தருணம் ஆகும்.
திரு.Azez அகமது, EC உறுப்பினர், செயலாளர் தமிழ்நாடு கூடைப்பந்து கழகம். திரு.ஸ்காட் ஃப்ளெமிங் இந்திய தலைமை பயிற்சியாளர், திரு.ஆதவ் அர்ஜுனா BFI தலைவர், திரு.டி. செங்கல்ராய நாயுடு பொருளாளர் BFI, திரு.நார்மன் ஸ்வரூப் ஐசக் தலைவர் தொழில்நுட்பக் குழு இந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றனர்.

திரு.முயின் பெக் ஹபீஸ் FIBA ஆசிய கோப்பை 2025 தகுதிச் சுற்றுக்கான இந்திய அணிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

FIBA ஆசிய கோப்பை 25 தகுதிச் சுற்றுக்கான இந்திய சீனியர் ஆண்கள் தேசிய கூடைப்பந்து அணி (சாளரம்-2):மாநிலம் மற்றும் பெயர்:-
பஞ்சாப் அம்ஜ்யோத் சிங், இந்திய ரயில்வே சஹைஜ் பிரதாப் சிங் செகோன் பஞ்சாப் கன்வார் குர்பாஸ் சிங் சந்துஉத்தர பிரதேசம் ஹர்ஷ் டகர் ,உத்தர பிரதேசம் குஷால் சிங், தமிழ்நாடு முயின் பெக் ஹபீஸ் (கேப்டன்)தமிழ்நாடு பாலதானேஷ்வர் பொய்யாமொழி,   தமிழ்நாடு அர்விந்குமார் முத்து கிருஷ்ணன், தமிழ்நாடு  பிரசாந்த் சிங் ராவத், தமிழ்நாடு  பிரனாவ் பிரின்ஸ், இந்திய ரயில்வே பால்ப்ரீத் சிங் பிரார், இந்திய ரயில்வே பிரின்ஸ்பால் சிங்
பயிற்சியாளர்கள்:- 
ஸ்காட் வில்லியம் ஃப்ளெமிங் – தலைமை பயிற்சியாளர், ராமலிங்க பிரசாத் குண்டுபள்ளி – பயிற்சியாளர், ஜோகிந்தர் சிங் – பயிற்சியாளர், சம்பாஜி கடம் – பயிற்சியாளர், சிவா சண்முக சிங் வீரபாண்டி – பிசியோதெரபிஸ்ட் சூரஜ் வீர் சர்மா – எஸ் மற்றும் சி பயிற்சியாளர்டி செங்கல்ராய நாயுடு – குழு மேலாளர்நிதிஷ் கண்ணன் – பிசியோதெரபிஸ்ட்,  டாக்டர் ஈஸ்வர் கொல்லி தேஜா – குழு மருத்துவர்