IGCAR வளாகத்தில் உள்ள BARC பயிற்சிப் பள்ளியின் பட்டமளிப்பு நாள், OCES – 2023
இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் (IGCAR) உள்ள BARC பயிற்சிப் பள்ளியின் 18 வது தொகுதி பயிற்சி அறிவியல் அலுவலர்கள் (OCES-2023) அணு அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் தங்கள் ஓராண்டு நோக்குநிலை மற்றும் பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளனர். மெக்கானிக்கல் இன்ஜினியரிங், கெமிக்கல் இன்ஜினியரிங், மின்னணுவியல் & கருவியியல், அணுஉலை இயற்பியல் மற்றும் அணு எரிபொருள் சுழற்சி வேதியியல் ஆகிய ஐந்து துறைகளில் ஜூலை 26, 2024 அன்று IGCAR இல் நடந்த சிறப்பு நிகழ்வில் பட்டம் பெற்றனர்.
டாக்டர். வித்யா சுந்தரராஜன் கூட்டத்தை வரவேற்று, கடந்த 18 ஆண்டுகளாக IGCAR-ல் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வரும் OCES திட்டத்தைப் பற்றிய சுருக்கமான பார்வையை வழங்கினார். செப்டம்பர் 2006 இல் IGCAR வளாகத்தில் BARC பயிற்சிப் பள்ளியின் தாழ்மையான தொடக்கத்தை அவர் நினைவு கூர்ந்தார். கடந்த 18 ஆண்டுகளில், 600 க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள் பட்டம் பெற்றுள்ளனர் மற்றும் DAE இன் பல்வேறு பிரிவுகளில் வெற்றிகரமாக இடம் பெற்றுள்ளனர்.
திரு. C.G கர்ஹாட்கர், புகழ்பெற்ற விஞ்ஞானி மற்றும் இயக்குனர், IGCAR மற்றும் GSO தனது உரையில், DAEயில் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல தொழில்நுட்ப சிறப்போடு பின்பற்ற வேண்டிய ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு போன்ற மதிப்புகள் பற்றி குறிப்பிட்டார். பேராசிரியர். A.K. தியாகி , FRSC, FNASc , FASc , FNAE, FNA, FTWAS, புகழ்பெற்ற விஞ்ஞானி, Dean, ஹோமி பாபா நேஷனல் இன்ஸ்டிடியூட், மும்பை, J.C.போஸ் நேஷனல் ஃபெலோ, கவுரவப் பேராசிரியர், JNCASR, பெங்களூரு மற்றும் முன்னாள் இயக்குநர், வேதியியல் குழு மற்றும் உயிரியல் அறிவியல் குழு, BARC, மும்பை, தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு, நினைவுமலரை வெளியிட்டு முதலிடம் பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் அடங்கிய மதிப்புமிக்க ஹோமிபாபா பரிசுகளை வழங்கினார். அவர் தனது உரையில், 1939 முதல் 2024 வரை அணுசக்தி திட்டத்தின் தொடக்கம் முதல் இன்று வரையுள்ள நினைவுப் பாதையில் பார்வையாளர்களை அழைத்துச் சென்றார். மேலும் பயிற்சியாளர்களுக்கு அவரது அனுபவத்தின் அடிப்படையில் ஆலோசனை வழங்கும்போது அணுசக்தி துறையின் அம்ரித்கால் இலக்கை அடைவதை நோக்கமாகக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார். திரு. கன்ஹையா குமார் பகத் அணு எரிபொருள் சுழற்சி வேதியியல் துறையிலிருந்து இந்த தொகுப்பின் ஒட்டுமொத்த முதலிடம் மற்றும் ஹோமி பாபா பதக்கத்தை பெற்றார். இந்த பட்டதாரி பயிற்சி அறிவியல் அலுவலர்கள் DAE இன் பல்வேறு பிரிவுகளில் முக்கியமான திட்டங்களில் நியமிக்கப்படுவார்கள்.