EMI (மாதத்தவணை) சினிமா விமர்சனம் : EMI (மாதத்தவணை) நடுத்தர மக்களின் ஆசைக்கும் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கும்  கட்டுப்படுத்த அடிக்கும் முன்னெச்சரிக்கை மணி | ரேட்டிங்: 3/5

0
278

இஎம்ஐ (மாதத்தவணை) சினிமா விமர்சனம் : இஎம்ஐ (மாதத்தவணை) நடுத்தர மக்களின் ஆசைக்கும் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கும்  கட்டுப்படுத்த அடிக்கும் முன்னெச்சரிக்கை மணி | ரேட்டிங்: 3/5

 

சபரி புரொடக்ஷன்ஸ் சார்பில் மல்லையன் தயாரித்திருக்கும் இஎம்ஐ படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் சதாசிவம் சின்னராஜ்.

இதில் சதாசிவம் சின்னராஜ் (சிவா), சாய் தான்யா (ரோஸி), பேரரசு, பிளாக் பாண்டி (பாலா), சன் டிவி ஆதவன், ஒஏகே சுந்தர், லொள்ளு சபா மனோகர், டிகேஎஸ், செந்திகுமாரி (லக்ஷ்மி) ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :- இசை – ஸ்ரீநாத் பிச்சை, ஒளிப்பதிவு – பிரான்சிஸ், பாடல்கள் – பேரரசு, விவேக், எடிட்டர் – ஆர். ராமர், நடனம் – தீனா, சுரேஷ் சித், ஸ்டண்ட் – மிராக்கில் மைக்கேல் , தயாரிப்பு மேற்பார்வை – தேக்கமலை பாலாஜி, மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்.

மாம்பழ தொழில்சாலையில் கெமிஸ்டாக வேலை செய்யும் சிவா (சதாசிவம் சின்னராஜ்) அங்கு சக​ ஊழியரான ரோஸியின் (சாய் தான்யா) மீது காதல் வயப்பட்டு அவரை கவர மாத தவணையில் விலை உயர்ந்த பைக் ஒன்றை வாங்க அதன் பின் காதல் கை கூடி இருவரும் காதலர்களாக வலம் வந்து திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணத்திற்கு பின் காதல் மனைவிக்கு மாத தவணையில் கார், விலை உயர்ந்த செல்போன் என்று வாங்க சிவாவின் நெருங்கிய நண்பர்கள் பிளாக் பாண்டி மற்றும் டிகேஎஸ் உத்தரவாத கையெழுத்து போடுகிறார்கள். இப்படி மகிழ்ச்சியாக வாழ்க்கை போய் கொண்டிருக்கும் போது சிவா வேலையை இழந்து பைக் மற்றும் காருக்கான இஎம்ஐ -யை செலுத்த முடியாமல் சிக்கலில் மாட்டி பண நெருக்கடியில் தவிக்கிறார். இதனால் உத்தரவாத கையெழுத்து போட்ட அவரது நண்பர்களும் பாதிக்கப்பட்டு சிவாவுடன் இருக்கும் நட்பை முறிக்கிறார்கள். அதன் பின் சிவாவிற்கு புதிய வேலை கிடைத்ததா? மாத தவணையை கட்ட முடிந்ததா? கடன் கொடுத்தவர்களால் ஏற்பட்ட அவமானங்கள், நெருக்கடிகள் என்ன? அதனால் அவரது குடும்பத்தினர் அனுபவிக்கும் கஷ்டங்கள் என்ன? என்பதே படத்தின் முடிவு.

கதாநாயகனாகவும், இயக்குனராகவும் களமிறிங்கியிருக்கும் சதாசிவம் சின்னராஜ்  இரண்டையும் முடிந்த வரை சரியாக செய்ய முயற்சித்துள்ளார்.கடன் வாங்கி அவதிப்படும் நடுத்தர குடும்ப இளைஞராக சிவா கதாபாத்திரத்தில் படம் முழுவதும் வந்து சந்திக்கும் இன்னல்களை திறம்பட கையாண்டுள்ளார்.

காதல் மனைவி ரோஸியாக சாய் தான்யா க்;ளைமேக்ஸ் காட்சியில் முக்கிய பங்களிப்பை கொடுத்துள்ளார்.

நண்பர்களாக பிளாக் பாண்டி, டிகேஎஸ், மாத தவணை வசூலிப்பவராக நடித்திருக்கும் ஆதவன், ரோஸியின் தந்தையாக பேரரசு, சிவாவின் அம்மா லக்ஷ்மியாக செந்தி குமாரி, ஒஏகே சுந்தர், லொள்ளு சபா மனோகர் ஆகியோர் நடிப்பு நகைச்சுவைக்கும், கதைக்களத்திற்கும் வலு சேர்த்து கவனம் ஈர்க்கின்றனர்.

ஒளிப்பதிவாளர் பிரான்சிஸின் தத்ரூபமான காட்சி கோணங்கள், இசையமைப்பாளர் ஸ்ரீநாத் பிச்சையின் இசை மற்றும் பின்னணி இசை, மற்றும் எடிட்டர் ஆர். ராமரின் படத்தொகுப்பு ஆகிய தொழில்நுட்ப கலைஞர்;களின் பங்களிப்பு படத்தின் காட்சிகளுக்கும், கதையின் முக்கிய தருணங்களை மேம்படுத்தி படத்திற்கு பக்கபலமாக துணை புரிந்துள்ளனர்.

நடுத்தர மக்களின் ஆசையை தூண்டி மாத தவணையில் கடன் வாங்க வைக்கும் தந்திரத்தில் சிக்கும் மக்களின் நிலையையும், அதன் பின் கட்ட முடியாமல் தவிக்கும் நிலையில் அவர்களின் குடும்பங்கள் படும் அவமானங்களையும், இ;ன்னல்களையும், சாட்சி கையெழுத்து போடும் நண்பர்களின் மனநிலையும் சிறப்பாக காட்சிப்படுத்தி அதில் காமெடி, காதல், சென்டிமெண்ட் கலந்து மக்களுக்கு மாத தவணையின் சிக்கல்களை புரிய வைப்பதிலும், அவசரப்பட்டு வாங்குவது அவசியம்தானா என்பதை அறிந்து யோசித்து வாங்க வேண்டும் என்பதை இயல்பாக சித்தரித்து இயக்கியுள்ளார் இயக்குனர் சதாசிவம் சின்னராஜ்.

மொத்தத்தில் சபரி புரொடக்ஷன்ஸ் சார்பில் மல்லையன் தயாரித்திருக்கும் இஎம்ஐ (மாதத்தவணை) நடுத்தர மக்களின் ஆசைக்கும் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கும்  கட்டுப்படுத்த அடிக்கும் முன்னெச்சரிக்கை மணி .