49வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி! – ‘நாள்தோறும் அன்னதானம்’ : அமைச்சர் சேகர் பாபு தகவல்!
சென்னை தீவுத்திடலில் நடைபெறவுள்ள 49வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி 2025-ல் இடம் பெறவுள்ள நிலையில், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழும கண்காட்சி அரங்குகளை அமைச்சர் சேகர் பாபு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு கூறுகையில்,
“பொங்கல் விழாவையொட்டி ஆண்டுதோறும் நடைபெற்று வரக்கூடிய பொருட்காட்சியை வடசென்னை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக 49ஆவது பொருட்காட்சியானது நடைபெற இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள துறைகளை சார்ந்த 46 அரங்குகள் அமைக்கப்பட உள்ளது.
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் புதிதாக துவங்கப்பட்ட கலைஞர் பேருந்து நிலையம் உட்பட 6 பேருந்து நிலையங்களின் மாதிரியை பொருட்காட்சியில் உருவாக்க உள்ளோம்.
இந்து சமய அறநிலைத்துறை சார்பில் 8400 சதுர அடியில் உலக அளவில் பேசப்பட்ட அனைத்து உலக முருகர் பக்தர் மாநாட்டை போல ஒரு வடிவமைப்பை இந்த பொருட்காட்சியில் இந்த ஆண்டு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் அரங்கை அமைத்துள்ளோம்.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு தெய்வங்களின் வழிபாட்டு முறைகளையும் அந்த தெய்வங்களின் வரலாற்றையும் இடம்பெறச் செய்துள்ளோம். இந்த ஆட்சி பொறுப்பேற்று நிகழ்த்திய சாதனைகளில் 40 சாதனைகளை படங்கள் வாயிலாக விளக்க உள்ளோம்.
சுமார் 11 திருக்கோவில்களில் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாயில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள அன்னதானத் திட்டம் தொடர்பான விளக்க புகைப்படம் அமைக்கப்பட உள்ளது. அதை போல் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கின்ற திட்டத்தினை விளக்கக்கூடிய வகையில் புகைப்படங்களும் கண்காட்சியில் வைக்கப்பட உள்ளது.
அதேபோல், 400 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழக்கு திருவிழா நடைபெற்ற கன்னியாகுமரி மாவட்ட கோவில் தொடர்பான விளக்கப் புகைப்படமும் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா பொருட்காட்சி நடைபெறக்கூடிய ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் உள்ள ஏதாவது ஒரு கோவிலின் பிரசாதம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய உள்ளோம்.
கடந்தாண்டு இன்று சமய அறநிலைத்துறையின் அரங்கமானது இரண்டாம் பரிசு பெற்றது. இந்த ஆண்டு முதல் பரிசு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறோம். நாங்கள் வழிபடுகின்ற பொழுது அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று தான் வழிபடுகிறோம். ஏனெனில் எங்களது வழிபாடு ஒரே குறிக்கோளை கொண்டு தான் இருக்கும். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை போன்று ஆனால் அரசியலை உள்ளே புகுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை.
குறிப்பாக எங்களைப் போன்ற ஆன்மீகவாதிகளுக்கு நன்கு தெரியும் இந்த காலகட்டத்தில் அவர் முருகருக்கு விரதம் இருந்து காலில் காலனி அணியாமல் விரதம் இருக்கும் நேரம் என்பது எங்களுக்கு நன்றாக அது தெரியும்.
எல்லோருக்கும் எல்லாம் என்பது எங்களது முதல்வரின் வழி அதேபோல் இந்து சமய அறநிலைத்துறையும் அதை பின்பற்றும்” என்றார்.