108 ஆம்புலன்ஸ்களை ட்ராக் செய்வதற்கான புதிய செயலி.. விரைவில் அறிமுகம்!

0
55

108 ஆம்புலன்ஸ்களை ட்ராக் செய்வதற்கான புதிய செயலி.. விரைவில் அறிமுகம்!

ஆம்புலன்ஸ் சேவையை நாடுவோர், ஆம்புலன்ஸ் எங்கிருக்கிறது என்று தெரிந்துகொள்வதற்கான செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

108 ஆம்புலன்ஸ் சேவையை நாடுவோர், ஆம்புலன்ஸ் எங்கிருக்கிறது என்று தெரிந்துகொள்வதற்கான செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அரசு வழங்கும் இலவச ஆம்புலன்ஸ் சேவையான 108 ஆம்புலன்ஸ்களை இயக்கும் EMRI GREEN HEALTH SERVICES, GVK ENTERPRISES நிறுவனம் தற்போது ஒரு செயலியை பரிசோதித்து வருகிறது. பயனருக்கு ஆம்புலன்ஸ் ஒதுக்கப்பட்டவுடன் அவருடைய மொபைல் எண்ணுக்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் தொடர்பு எண், ஆம்புலன்ஸ் எங்கு இருக்கிறது என்பதை அறிவதற்கான இணைய இணைப்பு ஆகியவை குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.

அதேபோல் ஆம்புலன்ஸ் ஒட்டுநருக்கு பயனரின் இருப்பிடத்தைத் தெரிவிக்கும் இணைப்பு அனுப்பப்பட்டுவிடும். இதன் மூலம் பயனர்கள் ஆம்புலன்ஸ்க்காகக் காத்திருக்கும் நேரமும் ஓட்டுநரின் தேவையற்ற அலைச்சலும் தவிர்க்கப்படும். கடந்த சில மாதங்களாகச் சோதனை ஓட்டத்தில் இருக்கும் இந்தச் செயலி விரைவில் நடைமுறைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.