முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரிப்பு – திட்டக்குழு அறிக்கை!

0
74

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரிப்பு – திட்டக்குழு அறிக்கை!

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் 90 விழுக்காடுக்கும் மேற்பட்ட குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் செயல்படுத்திய திட்டங்கள் குறித்து, மாநில திட்டக்குழு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து ஐந்தாயிரத்து 410 குழந்தைகள் கொண்ட 100 பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், இத்திட்டதால் குழந்தைகள் பள்ளிகளுக்கு குறித்த நேரத்தில் வருவது அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மழை விட்டாலும் திரும்பாத இயல்புநிலை.. வெள்ளத்தின் பிடியில் வயல்வெளிகள்!
90 விழுக்காடுக்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் முந்தைய பாடங்களை நினைவுகூறும் திறன் அதிகரித்துள்ளது என்றும், குழந்தைகளின் கற்றல் ஆர்வத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான எண்ணும் எழுத்தும் திட்டத்தின் மூலம், தொடக்க கல்வியின் தரம் உயர்ந்துள்ளது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.