பாஜகவில் இணைந்தார் குஷ்பு..

0
226

பாஜகவில் இணைந்தார் குஷ்பு..

பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி ரவி, தமிழக பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் குஷ்பு.

தமிழகத்தின் பிரபல திரைப்பட நடிகை குஷ்பு, தி.மு.கவிலிருந்து விலகி 2016-ம் ஆண்டு காங்கிரஸில் இணைந்தார். காங்கிரஸில் இணைந்த அவருக்கு அகில இந்திய செய்தித் தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இருப்பினும், அவர் தமிழக அரசியலில் தீவிரமாக ஈடுபடாமல் தேசிய அரசியலில் மட்டுமே கவனம் செலுத்திவந்தார்.

பா.ஜ.கவில் சேர்வதாக இருந்தால், நான் ஏன் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்? என்று காட்டமாக பதில் அளித்திருந்தார். இந்தநிலையில், குஷ்பு பா.ஜ.கவில் இணையவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி சென்றுள்ள அவர் இன்று ஜே.பி.நட்டா முன்னிலையில் பா.ஜ.கவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.அரசியல் களத்துடன் தொடர்பில்லாதவர்கள், கட்சிக்காக உழைக்க நினைக்கும் தன்னைப் போன்றவர்களிடம் அதிகாரம் செலுத்துகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து என்னை நான் விடுவித்து கொள்கிறேன் எனவும் குஷ்பு அறிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

’கள நிலவரம் தெரியாதவர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்’ என தனது அறிக்கை தெரிவித்துள்ள குஷ்பு, காங்கிரஸ் உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும், ராஜினாமா செய்வதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பாஜக மூத்த தலைவர்கள் சி.டி ரவி, சம்பித் பத்ரா, தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் ஆகியோர் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.