நவராத்திரியில் தேவி அன்னையின் வழிபாட்டால் மனம் அளப்பரிய அமைதியால் நிரம்பியுள்ளதாகப் பிரதமர் தெரிவித்துள்ளார்
PIB Chennai: நவராத்திரியில் அன்னை தேவியை வழிபடுவதால் மனதில் நிரம்பியுள்ள அளவற்ற அமைதி குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தெரிவித்துள்ளார். பண்டிட் பீம்சென் ஜோஷியின் பஜனைப் பாடலையும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
“நவராத்திரியில் அன்னையை வழிபடுவது மனதை மிகுந்த அமைதியால் நிரப்புகிறது. பண்டிட் பீம்சென் ஜோஷி அவர்களால் அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆத்மார்த்தமான பஜனை மயக்குகிறது…”