‘திராவிட மாடல் அரசின் சாதனை பட்டியல்’ – தமிழ்நாடு அரசு பெருமிதம் : ஆளுநர் உரை முழு தொகுப்பு உள்ளே!

0
68

‘திராவிட மாடல் அரசின் சாதனை பட்டியல்’ – தமிழ்நாடு அரசு பெருமிதம் : ஆளுநர் உரை முழு தொகுப்பு உள்ளே!

தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடப்பாண்டிற்கான முதல் கூட்டம் இன்று (ஜனவரி 6) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அரசு சார்பில் வழங்கப்பட்ட ஆளுநர் உரையின் முழு விவரம் பின்வருமாறு,

2025 ஆம் ஆண்டிற்கான எனது தொடக்க உரையை ஆற்றுவதை நான் பெரும்பேறாகக் கருதுகிறேன். இத்தருணத்தில் அனைவருக்கும் எனது புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்புத்தாண்டில் அனைவரும் மகிழ்வும் மகிழ்வும் வளமும் பெறவேண்டும் என வாழ்த்துகிறேன். இந்த அரசின் வழிகாட்டியாக விளங்கும் அய்யன் திருவள்ளுவரின் காலத்தால் அழியாத வாக்கினை நினைவு கூர்ந்து எனது உரையைத் தொடங்குகிறேன்.

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்

சேரா தியல்வது நாடு

(குறள்-734)

(பசியும், பிணியும், பகையுமற்ற நாடுதான் சிறந்த

நாடு எனப் பாராட்டப்படும்)

2. வலுவான கட்டமைப்பையும், முற்போக்கான வளர்ச்சிக் கொள்கைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள தமிழ்நாடு, இன்று நமது நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாகத் திகழ்கிறது. தொன்மையும், புதுமையும் இரண்டறக் கலந்து அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது.

முந்தைய ஆண்டுகளில் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.4 சதவீதமாக இருந்த நமது மாநிலத்தின் பங்கு, கடந்த நாற்பது ஆண்டுகளில் 9.21 சதவீதமாக உயர்ந்துள்ளதே திராவிட இயக்கக் கொள்கைகளுக்குக் கிடைத்த வெற்றிக்குச் சிறந்த சான்றாகும். வெற்றிப் பாதையில் மேலும் முன்னேறிடும் வகையில், எதிர்வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டினை 1டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்துவதை தமிழ்நாடு தனது இலக்காகக் கொண்டுள்ளது.

3. இந்த பொருளாதாரக் குறியீடுகளில் தமிழ்நாடு எட்டியுள்ள வளர்ச்சியானது, அதன் மனிதவள மேம்பாட்டுக் குறியீடுகளிலும் பிரதிபலிக்கிறது. இவ்வாறு, பொருளாதார வளர்ச்சி அடைவதுடன் மருத்துவம், கல்வி மற்றும் சமூகநலனையும்

மேம்படுத்துவதில் நாட்டிற்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இச்சாதனைக்கு வித்திட்ட தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர்களின் சீரிய வழியில், நமது முதலமைச்சர் அவர்களும் எதிர்காலத் தலைமுறைகளின் வாழ்வை

செம்மையாக வடிவமைத்திடுவதற்காக பல முன்னோடித் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.

4. இந்த அரசின் தலைசிறந்த திட்டங்களுள் ஒன்றான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மகளிரின் பொருளாதார மேம்பாட்டிற்கு வழிவகுத்துள்ளது.

அனைத்துக் வாழ்க்கைக்குத் குடிமக்களின் கண்ணியமான தேவையான குறைந்தபட்ச வருமானத்தை உறுதிசெய்வதே சமச்சீர் நோக்குடைய

அரசின் கடமையாகும் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ்,1.15 கோடி குடும்பங்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாயை இந்த அரசு உரிமைத்தொகையாக வழங்கி வருகிறது. இவ்வாறு பயன்பெறும் குடும்பங்களின் வறுமையை இத்திட்டம் குறைத்துள்ளது மட்டுமன்றி, பெண்களுக்கு உரிய உரிமையும் அதிகாரமும் அளித்ததன் மூலம், பெண்களின் நிலையினையும் குடும்பங்களில் உயர்த்தியுள்ளது.

5. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், அன்றாடப் பணிகளுக்காக பெண்கள் கட்டணமின்றிப் பயணிக்க வகைசெய்யும் மகளிர் விடியல் பயணத் திட்டத்தை அறிமுகப்படுத்தியதில் நமது அரசு நாட்டிற்கே முன்னோடியாக விளங்குகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 571 கோடிக்கும் மேற்பட்ட பயணங்களை பெண்கள் மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘திராவிட மாடல் அரசின் சாதனை பட்டியல்’ – தமிழ்நாடு அரசு பெருமிதம் : ஆளுநர் உரை முழு தொகுப்பு உள்ளே!
இவ்வாறு பெண்கள் தங்குதடையின்றிப் பயணம் மேற்கொள்வதால், கடந்த 2021ஆம் ஆண்டில் 32 இலட்சமாக இருந்த பெண்களின் தினசரிப் பயண எண்ணிக்கை தற்போது 57 இலட்சமாக அதிகரித்துள்ளதன் மூலம், பெண்களின் முன்னேற்றத்திற்கு இத்திட்டம் பேருதவியாக விளங்குவது தெளிவாகிறது. இத்திட்டத்தின் பலனாக ஒவ்வொரு குடும்பமும் சராசரியாக மாதம் 888 ரூபாயை சேமிப்பதுடன், பணிச்சூழலில் பெண்களின் பங்களிப்பினையும் மேம்படுத்தியுள்ளதை மாநில திட்டக்குழு நடத்திய ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.

6. இன்று உலகளவில் பாராட்டப்படும் மதிய உணவுத் திட்டம், ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் முதன்முதலாக நீதிக்கட்சியின் ஆட்சிக்காலத்தில், சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கியதன் மூலம் தொடங்கப்பட்டதே ஆகும். 1962ஆம் ஆண்டில் பள்ளிச் சேர்க்கை விகிதத்தை உயர்த்தி, இடைநிற்றல் விகிதத்தைக் குறைப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு, பெருந்தலைவர் காமராசர் அவர்களால் மாநிலம் முழுவதும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து,மக்கள் திலகம் எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டினைப் போக்கும் வகையில் 1982ஆம் ஆண்டு இத்திட்டத்தினை சத்துணவுத் திட்டமாக மாற்றினார். மேலும், 1989 ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இத்திட்டத்தில் உணவுடன் முட்டையையும் வழங்கி, உணவில் ஊட்டச்சத்தினை உயர்த்தி இத்திட்டத்தினை மேலும் மேம்படுத்தினார்.

7. தேசிய அளவில் முத்திரை பல்வேறு முன்னோடித் பதித்த திட்டங்களை அறிமுகப்படுத்திய வரலாறு தமிழ்நாட்டிற்கு உண்டு. இம்முயற்சிகளுக்கெல்லாம் மகுடம் சூட்டும் விதமாக, நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை’ தொடங்கி தமிழ்நாட்டின் பெயரை வரலாற்றின் பொன்னேடுகளில் பொறிக்கச் செய்துள்ளார். இந்த முன்னோடித் திட்டத்தின் கீழ், அனைத்து அரசு தொடக்கப் பள்ளிக் குழந்தைகளுக்கும் சூடான, சத்தான காலை உணவு தினந்தோறும் வழங்கப்படுகிறது.

இதனால், அவர்களின் வருகையும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது மட்டுமின்றி, ஊட்டச்சத்தும் அதிகரித்து, அவர்களின் வகுப்பறையில் கவனிக்கும் திறனும் மேம்பட்டுள்ளது. இத்திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கிராமப்புறங்களில் உள்ள 3,995 அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மொத்தமாக,

தற்போது மாநிலம் முழுவதும் உள்ள 34,987 தொடக்கப் பள்ளிகளில் 17.53 இலட்சம் பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. குழந்தைகளின் நலன் மற்றும் கல்வி வளர்ச்சி மீது இந்த அரசு கொண்டுள்ள அக்கறையையும், அசைக்க முடியாத உறுதிப்பாட்டினையும் எடுத்துக்காட்டும் வகையில் இத்திட்டம் விளங்குகிறது.

8. மாணவர்களுக்குத் தரமான கல்வியை வழங்குவதில் மாநில அரசு இவ்வாறு உறுதியுடன் செயல்பட்டு வரும் நிலையில், மாநிலத்தின் முயற்சிகளுக்கு ஒன்றிய அரசு தேவையான ஆதரவினை வழங்கவில்லை. ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டிற்கு உரிய நிதியை விடுவிக்கக் கோரி தொடர்ந்து முறையிட்டும், புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்காததைக் காரணமாகக் கூறி, ஒன்றிய அரசு நடப்பு ஆண்டில் இதுவரை எந்தவொரு நிதியையும் விடுவிக்கவில்லை.

2,152 கோடி ரூபாய் அளவில் உள்ள இந்நிலுவைத் தொகையானது, ஆசிரியர்களின் ஊதியம், பள்ளிக் கட்டடங்களைப் பராமரித்தல் மற்றும் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் கல்விக் கட்டணத்தைத் திருப்பிச் செலுத்துதல் உள்ளிட்ட பள்ளிகளின் பல்வேறு செயல்பாடுகளுக்கு மிகவும் இன்றியமையாததாகும். ஒன்றிய அரசு இந்த நிதியை வழங்காததால், தனது சொந்த நிதி ஆதாரங்களிலிருந்து மாநில அரசே இத்திட்டத்திற்கான ஒட்டுமொத்தச் செலவையும் ஏற்க வேண்டியுள்ளது.

இதனால், மாநில அரசின் நிதிநிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 44 இலட்சம் மாணவர்கள், 2.2 இலட்சம் ஆசிரியர்கள் மற்றும் 21,276 பணியாளர்களின் எதிர்காலம் ஆகியவை இந்நிதி உரிய நேரத்தில் விடுவிக்கப்படுவதையே சார்ந்துள்ளதால், ஆசிரியர்கள் மற்றும் மாணவர் நலன் காக்க ஒன்றிய அரசு இந்நிதியை விரைவில் விடுவிக்கும் என்று மாநில அரசு நம்புகிறது.

9. அனைவருக்கும் உயர்கல்வி வாய்ப்புகள் கிடைக்கச் செய்யும் நோக்கத்துடன், அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பொறியியல், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து தொழில்முறை படிப்புகளிலும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த முன்முயற்சியின்கீழ், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணம், விடுதி மற்றும் போக்குவரத்துக் கட்டணம் உள்ளிட்ட மொத்த கல்விச் செலவினையும் ஏற்றுக்கொண்டுள்ளது.

கடந்த அரசே கல்வியாண்டுகளில், இத்திட்டத்தின் நான்கு கீழ் 1,165 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 35,530 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். ஏழைக் குடும்பங்களைச் சார்ந்த மாணவிகள் உயர்கல்வி நிறுவனங்களில் பயில்வதை உறுதி செய்வதற்கான அரசின் மற்றுமொரு முன்னோடித் திட்டமாக, புதுமைப் பெண் திட்டம் எனும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் இந்த அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு அவர்களின் இளங்கலைக் கல்விக் காலம் முழுவதும் மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் இதுநாள்வரை 4.25 இலட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளதுடன், மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கை விகிதமும் அதிகரித்துள்ளது.

மேலும், இந்த ஆண்டில், அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் படித்த மாணவிகளுக்கும் இத்திட்டத்தை நமது அரசு விரிவுபடுத்தியுள்ளது. பெண்களின் உயர்கல்விச் சேர்க்கை விகிதத்தில் நிலவும் நல்ல வளர்ச்சி தொடர வேண்டும் என்பதையும், கல்வியின் மூலம் பாலின சமத்துவ மேம்பாட்டினையும், தங்களுக்குரிய அதிகாரத்தையும் பெண்கள் பெற வேண்டும் என்பதையும் குறிக்கோளாகக் கொண்டு இந்தத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

11. புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் அனைத்துப் பெண்களுக்கும் உயர்கல்வி கிடைக்கச் செய்வதில் வெற்றிகண்ட நமது அரசானது, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் 6 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி பயிலும் காலத்தில் மாதந்தோறும் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்குவதற்கான தமிழ்ப் புதல்வன் திட்டத்தையும் கடந்த ஆண்டு தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், நடப்புக் கல்வியாண்டில் மட்டும் 3.52 இலட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

12. நமது முதலமைச்சர் அவர்களின் கனவுத் திட்டமான, ஆண்டுதோறும் 10 இலட்சத்திற்கும் வாய்ந்தவர்களாக மேற்பட்ட மாணவர்களை திறன் உருவாக்கும் இலக்குடன், இந்த அரசு தொடங்கிய நான் முதல்வன் திட்டமானது மாணவர்களை தொழில்சார்ந்த திறன் கொண்டவர்களாக மேம்படுத்தி, இந்தியாவின் இளைஞர்களின் திறன்மிக்க தலைநகரமாக தமிழ்நாட்டை நிலைநிறுத்தியுள்ளது.

2023-24ஆம் ஆண்டில், இத்திட்டம் பல்தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கும், தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு, 2,085 கல்வி நிறுவனங்களில் பயிலும் 14.68 இலட்சம் மாணவர்கள் தற்போது பயன்பெற்றுள்ளனர். அனைவரின் வரவேற்பினையும் பெற்ற இத்திட்டத்தின் மூலம் நடத்தப்படும் வளாக வேலைவாய்ப்பு முகாம்கள் (Campus Placement Drives) வாயிலாக, இதுவரை 2,58,597 மாணவர்கள் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.

13. விளையாட்டுத் துறையில் ஒரு பெரும் புரட்சியை நமது முதலமைச்சர் அவர்களின் தலைமையின் கீழ் இந்த அரசு நிகழ்த்தியுள்ளது. சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போன்ற பிரமாண்டமான சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளை வெற்றிகரமாக நடத்தியது முதல், டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராமத்திலும் அடங்கிய விளையாட்டுப் தொகுப்புகளை பொருட்கள் வழங்குதல், வீரர்களுக்கான முன்னெப்போதும் இல்லாத அளவில் விளையாட்டு ஊக்கத்தொகைத் திட்டங்கள், அரசுப் பணிகளில் விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீதம் இடஒதுக்கீட்டின் கீழ் பணி நியமன ஆணைகள் வழங்குதல் போன்ற முன்னெடுப்புகள், விளையாட்டு வீரர்களுக்கு உகந்த சூழலை ஏற்படுத்தித் தருவதில் மாநில அரசின் முழு ஈடுபாட்டினை எடுத்துரைக்கின்றன.

இவை யாவும் இளைஞர்களின் உடல் நலனை மேம்படுத்துவது மட்டுமின்றி, ஒழுக்கத்தையும், வெல்லும் மனப்பான்மையையும் வளர்க்கின்றன. இத்தகைய தொடர்முயற்சிகள் தமிழ்நாட்டினை இந்தியாவிலேயே வலிமைமிக்கதொரு விளையாட்டு மையமாக உருவாக்கி வருகின்றன என்பதற்கு, பல்வேறு சர்வதேசப் போட்டிகளில் வெற்றிவாகை சூடிவரும் தமிழ்நாட்டு வீரர்களின் சாதனை ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

14. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் தமிழ்நாடு. இந்தியாவின் மாநிலமாகத் தொடர்ந்து திகழ்ந்து தமிழ்நாட்டில் உள்ள 36 அரசு முன்னணி வருகிறது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 299 அரசு பொது மருத்துவமனைகள், 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 8,713 துணை சுகாதார நிலையங்களின் மூலம் வலுவான மருத்துவக் கட்டமைப்பை நாம் உருவாக்கியுள்ளோம். இதன் மூலம். பல வளர்ந்த நாடுகளுக்கு இணையாக ஒப்பிடக்கூடிய வகையில், தமிழ்நாட்டின் மருத்துவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையிலான விகிதம் 2.5:1000 என்ற உயர் அளவில் அமைந்துள்ளது.

அண்மை ஆண்டுகளில் மருத்துவத் துறை கட்டமைப்பு, மருத்துவச் சேவைகளின் மேம்பாடு மற்றும் தரமான மருத்துவச் சேவைகள் அனைவருக்கும் கிடைப்பதை உறுதிசெய்திடத் தேவையான நிதியை அரசு ஒதுக்கி வருகிறது. இத்தகைய முயற்சிகள் அனைத்தும் மாநிலத்தின் பல்வேறு சுகாதாரக் குறியீடுகளை மேம்படுத்தியுள்ளன. உலகெங்கிலும் இருந்து ஆண்டுதோறும் 15 இலட்சம் நபர்கள் உயர்தர சிகிச்சை தமிழ்நாட்டிற்கு வருகைபுரிவதற்கும் மேலும். சுமார் பெற்றிட இவை வழிவகுத்துள்ளன. இதனால், உயர்தர மருத்துவ சிகிச்சைகளை சிறப்பாக வழங்கி, இந்தியாவின் மருத்துவத் தலைநகரமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது.

15. மக்கள் தங்கள் இல்லங்களிலிருந்தே கட்டணமில்லா மருத்துவச் சேவைகளை எளிதில் பெறும் வகையில், தமிழ்நாடு அரசு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வரும் மக்களைத் தேடி மருத்துவம் என்ற முன்னோடித் திட்டத்திற்காக. 2024 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகளின் முகமைகளுக்கு இடையேயான விருது என்ற மிகப்பெரிய அங்கீகாரத்தை ஐக்கிய நாடுகள் சபை அண்மையில் தமிழ்நாட்டிற்கு வழங்கிச் சிறப்பித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ், இதுவரை, 2 கோடி நபர்கள் பயனடைந்துள்ளனர். விபத்து நடந்த முதல் 48 மணி நேரத்திற்குள் கட்டணமில்லா, சிறந்த அவசர சிகிச்சையை அளித்திட, நாட்டிற்கே முன்னோடியாக விளங்கும் இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48′ எனும் திட்டத்தினை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் இதுவரை 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட விலைமதிப்பற்ற மனித உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ், கட்டணமில்லா மருத்துவச் சேவையைப் பெறுவதற்கான தனிநபர் உச்சவரம்பு ஒரு இலட்சம் ரூபாயிலிருந்து இரண்டு இலட்சம் ரூபாயாக தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.

16. தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பின்பற்றி அனைத்துக் குடிமக்களின் நலனையும், குறிப்பாக, விளிம்புநிலை மக்களின் கண்ணியத்தைக் காத்திட இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. விளிம்புநிலைச் சமூகங்களை மேம்படுத்துவது ஒரு அரசின் தார்மீகக் கடமை மட்டுமல்லாமல், அது அம்மக்களின் அடிப்படை உரிமை எனவும் இந்த அரசு நம்புகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டுச் செயல் திட்டத்திற்கான சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்றியுள்ளது. இச்சமுதாயத்திற்கான வளர்ச்சித் திட்டங்களைத் தீட்டுதல், அவற்றிற்கு ஏற்பளித்தல், செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தல் ஆகியவற்றுக்கான வலுவான கட்டமைப்பை இச்சட்டம் உருவாக்குகிறது. குறிப்பாக, இம்மக்களின் மக்கள்தொகைக்கு FFLIT 601 விகிதாச்சாரத்திற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதற்கும், அந்நிதி முழுமையாகச் செலவிடப்படுவதற்கும் இச்சட்டத்தின் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

17. தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தினரின் வாழ்க்கைத் தரத்தையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்திட இந்த அரசு தொடர்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

குடிநீர் வசதி, தெருவிளக்கு, சாலைக் கட்டமைப்பு போன்ற அடிப்படை வசதிகளை அளித்து, அவர்களின் குடியிருப்புகளையும் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தும் வகையில் அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. இதேபோன்று, பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் தேவையான அடிப்படை வசதிகளை அளித்திட தொல்குடி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

18. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகங்களைச் சார்ந்த இளைஞர்களின் வணிகம் மற்றும் தொழில் முன்முயற்சிகளை ஊக்குவிப்பதற்கும், தொழில் தொடங்குவதற்கான மூலதன மானியம் மற்றும் வட்டி மானியம் ஆகியவற்றை வழங்குவதற்கும். அண்ணல் திட்டம் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் தொடங்கப்பட்டுள்ளது. அண்மையில், தூய்மைப் பணியாளர்களைத் தொழில்முனைவோராக மாற்றுவதற்கு. இறந்த தூய்மைப்பணியாளர்களின் வாரிசுகள், தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு முன்னுரிமை அடிப்படையில், 60 கோடி ரூபாய் மானியத்தில் 213 நவீன கழிவு அகற்றும் வாகனங்களை ஒதுக்கீடு செய்யும் தமிழ்நாடு அரசின் புரட்சிகரமான திட்டத்தினை முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்.

மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகங்களின் சமூக-பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சிக் குறியீடுகளை மேம்படுத்தும் வகையில், தொழில்முனைவோருக்கு கடனுதவி வழங்குவதற்காக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான முதலமைச்சரின் சமூக-பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் (CM-ARISE) தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களின் பொருளாதாரச் சுதந்திரமும் தன்னம்பிக்கையும் உயர்ந்துள்ளன. சமமான வளர்ச்சியும் சமூகநீதியும் அனைவருக்கும் கிடைக்கச் செய்வதுடன், விளிம்புநிலைச் சமூகங்களைச் சார்ந்த மக்களின் முன்னேற்றத்திற்காகவும் மேம்பாட்டிற்காகவும் இந்த அரசு மேற்கொண்டு வரும் இடைவிடா முயற்சிகளுக்கு இத்திட்டங்கள் நற்சான்றாகும்.

19. அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் பலன்கள் தகுதியானவர்களைச் சரியாகச் சென்றடைவதன் மூலமாகவே அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமத்துவச் சமுதாயத்தை உருவாக்க இயலும். அத்தகைய விளிம்புநிலை சமூகங்களை மேம்படுத்துவதற்கான இலக்குகள், கொள்கைகள் மற்றும் திட்டங்களைத் தீட்டுவதற்குத் தேவையான அடிப்படை ஆதாரங்களைத் திரட்டிட தேசிய அளவிலான சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்றியமையாதது.

எனவே, தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பினை ஒன்றிய அரசு உடனே தொடங்க வேண்டுமென்றும், அத்துடன், இம்முறை சாதிவாரியான கணக்கெடுப்பையும் இணைத்தே நடத்த வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நமது கோரிக்கையை ஒன்றிய அரசானது காலம் தாழ்த்தாமல் உடனடியாக நிறைவேற்றிட வேண்டும்.

20. முதுகலை பட்டப்படிப்பு வரையிலும் மாற்றுத்திறனாளிகள் பயின்றிட அவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை அண்மையில் அரசு இருமடங்காக உயர்த்தியுள்ளது. TN-RIGHTS திட்டத்தின் கீழ், விழுதுகள் என்று அழைக்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சேவை மையங்களை அமைத்திட அரசு முனைந்துள்ளது. சோழிங்கநல்லூரில் இதன் முதல் மையம் திறக்கப்பட்டுள்ளதுடன், மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி இதுபோன்ற மையங்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்படவுள்ளன.

21. தமிழ்நாட்டின் மரபுசார் கைவினைத் தொழில்கள் மற்றும் இதர சிறுதொழில்களை மேம்படுத்திட கலைஞர் கைவினைத் திட்டத்தை அண்மையில் அரசு தொடங்கியுள்ளது. தனித்துவமிக்க 25 கைவினைத் தொழில்கள் மற்றும் கலைகளைப் பாதுகாத்திடவும். அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் கைவினைஞர்களுக்கும், சேவைத் தொழில்களுக்கும் மானியத்துடன் கூடிய கடன் வசதி மற்றும் நிதியுதவியை எளிதாகப் பெற்றிடவும் இத்திட்டம் வழிவகுக்கும்.

உள்ளூர் கைவினைஞர்கள் வழங்கும் சேவைகளை நவீன முறையில் வடிவமைத்துக் கொள்ளும் அணுகுமுறையை இத்திட்டத்தின் மூலம் அரசு கொண்டு வந்துள்ளது. இத்திட்டமானது சமூக ஏற்றத்தாழ்வுகளை அகற்றிடவும். இளைய தலைமுறையினருக்கான கல்வி வாய்ப்புகளை தடையின்றி வழங்கிடும் நோக்கோடு, அனைவருக்கும் சம வாய்ப்பளிக்கும் திட்டமாகச் செயல்படுத்தப்பட உள்ளது.

22. தமிழ்நாடு அரசு கைத்தறித் துறையை மேம்படுத்துவதற்கு சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டின் பண்பாடு மற்றும் மரபினைப் பாதுகாத்து. தேசிய அளவில் முன்னிலைப்படுத்தும் விதமாக ஒருங்கிணைந்த பெருவளாகம் (Unity Mall) சென்னை எழும்பூர் கைத்தறி வளாகத்தில் 4.5 இலட்சம் சதுரடி பரப்பளவில் 227 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது.

நூற்புத் துறையில் தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக மாற்றும் வகையில் நூற்புத் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக அடுத்த 10 ஆண்டுகளில் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 6 சதவீத வட்டி மானியம் வழங்கும் மாநில அரசின் முன்னோடித் திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இம்முயற்சிகள் இத்துறையை நவீனமயமாக்கி, வளர்ச்சியை எட்டிட உதவும். அடுத்தகட்ட

23. ஏழ்மை நிலையிலுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிரந்தரமான பாதுகாப்பான வீடுகளைக் கட்டித் தருவது. அக்குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதுடன், சமுதாயத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பயன்படும் என்பதை இந்த அரசு உணர்ந்துள்ளது. அதன்படி, 2024-25 ஆம் ஆண்டு தொடங்கி அடுத்த ஆறு ஆண்டுகளில் தலா 3.50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கிராமப்புறங்களில் 8 இலட்சம் கான்கிரீட் வீடுகளைக் கட்டித்தர வேண்டும் என்ற குறிக்கோளுடன், கலைஞரின் கனவு இல்லம் என்ற திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

குடிசைகள் இல்லா மாநிலமாக உருவெடுத்திடுவதற்கான தமிழ்நாட்டின் பயணம். 2010 ஆம் ஆண்டில், தலா 60,000 ரூபாய் என்ற மதிப்பீட்டில் வீடுகளை அமைப்பதற்கான கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் தொடங்கியது. கடந்த 14 ஆண்டுகளில் இத்தொகை ஆறு மடங்கு உயர்த்தப்பட்டு, தற்போது 3.50 இலட்சம் ரூபாயை எட்டியுள்ளது. வறியோரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் மாநில அரசிற்கு உறுதிப்பாட்டினை இந்த உயர்வு தெள்ளத் தெளிவாக்கும்.

இதற்கு மாறாக, ஒன்றிய அரசின் பிரதமர் ஊரசு வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், 2016 ஆம் ஆண்டில் வீடு ஒன்றிற்கு நிர்ணயிக்கப்பட்ட 120 இலட்சம் ரூபாய் மதிப்பீடு கடந்த எட்டு ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை. தமிழ்நாட்டில் பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ். பயனாளிகளுக்கு வீடு ஒன்றிற்கு வழங்கப்படும் மானியத் தொகையானது 282 இலட்சமாக உயர்த்தப்பட்டு மாநில அரசின் பங்களிப்பு 172 இலட்சம் ரூபாய், அதாவது மொத்த மதிப்பில் 60 சதவீதம் என்பது. நாட்டிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

24. ஊரகப் பகுதிகளில் மருத்துவம், வேளாண் விற்பனை, கல்வி, வங்கி மற்றும் நிதிச் சேவைகள் போன்ற அத்தியாவசிய சேவைகளை மக்கள் பெறுவதில் சாலை இணைப்புகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதனை மேம்படுத்த முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 9,653 கிமீ. சாலைகளை மேம்படுத்தும் பணிகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. கூடுதலாக 10,000 ஊரகப் நீளமுள்ள மேம்படுத்தும் நோக்கில், இத்திட்டம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

25. 2019-21 ஆண்டுகளுக்கான 5ம் கட்ட தேசிய குடும்பநல ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், ஒன்றிய அரசின் நிதி ஆயோக் அமைப்பு அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் பன்முக வறுமைக் குறியீடுகளின் கீழ் 22 சதவீத மக்கள் மட்டுமே ஏழைகளாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தேசிய சராசரியான 14.96 சதவீதத்தை விட மிகக் குறைவு. இருப்பினும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் வறுமையை முற்றிலுமாக ஒழிப்பதற்கான இறுதி முயற்சியாக, முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை மாநில அரசு தொடங்கவுள்ளது.

மருத்துவம், வீட்டுவசதி மற்றும் கல்வி வாய்ப்புகளை ஒருங்கிணைத்து வழங்குவதன் மூலம் முதற்கட்டமாக 5 இலட்சம் மிகவும் வறிய குடும்பங்களை மேம்படுத்துவதை இத்திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது. ஆதரவற்ற தனிநபர்கள், முதியவர்கள். ஆதரவற்ற குழந்தைகள், ஒற்றைப் பெற்றோர் கொண்ட குடும்பங்கள், மாற்றுத்திறன் கொண்டவர்கள் LD-GOT வளர்ச்சிக் குறைபாடு கொண்டவர்கள் மற்றும் சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் உள்ளிட்ட மிகவும் பின்தங்கியுள்ள மக்களின் முன்னேற்றத்தில் தனிக் கவனம் செயல்படுத்தப்படவுள்ளது. செலுத்தி இத்திட்டம்

26. மாநிலத்தின் வேளாண் விளைநிலங்களைப் பாதுகாத்துப் பராமரிப்பதற்கு இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. இந்நோக்கத்தை எய்திட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கென தனி வரவு-செலவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது உள்ளிட்ட L160 முன்னோடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், தரிசு நிலங்கள் விளைநிலங்களாக மாறி வருகின்றன.

மேலும், நெல் மற்றும் கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கு உயர்த்தப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் கூடுதலாக ஊக்கத்தொகை, முழுமானியத்துடன் கூடிய மின் இணைப்புகள் போன்ற நடவடிக்கைகளால் விவசாயிகளின் வருவாய் கணிசமான அளவில் உயர்ந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டிலுள்ள விவசாயிகள் தேசிய அளவில் தங்களது விளைபொருட்களை விற்பனை செய்திட எதுவாக இதுவரை 157 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மின்னணு தேசிய வேளாண் சந்தையுடன் (e.NAM) இணைக்கப்பட்டுள்ளன.

கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து 5.779 கோடி ரூபாய் மதிப்பிலான வேளாண் வேளாண் 19.60 இலட்சம் மெட்ரிக் LGOT விளைபொருட்கள் மின்னணு தேசிய சந்தையின் மூலம் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டதுடன் மின்னணு பணப்பரிமாற்றம் மூலம் 4,055 கோடி ரூபாய் வழங்கப்பட்டு 16:13 இலட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இவை யாவும். மின்னணு வேளாண் வர்த்தகத்தில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ்வதை உறுதிசெய்கிறது.

27. சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், நமது அரசு, தமிழ்நாடு சிறுதானியங்கள் இயக்கத்தினை செயல்படுத்தியுள்ளது. மேலும், குறுவைப் பருவத்தில் குறைந்தளவு நீர் தேவைப்படும் பயிர்களான சிறுதானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய்வித்துகளை மாற்றுப் பயிர்களாக ஊக்குவித்திட பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. தன்னிறைவு மற்றும் பயிர் சுழற்சியை ஊக்குவிக்கும் இம்முன்முயற்சிகளின் பலனாக, பருப்பு வகைகள், எண்ணெய்வித்துகள், சிறுதானியங்கள் மற்றும் சிறு தோட்டக்கலைப் பயிர்களின் நிகர விதைப்புப் பரப்பானது. 2023 ஆம் ஆண்டு 40,554 ஹெக்டேரிலிருந்து 2024 ஆம் ஆண்டு 1.11 இலட்சம் ஹெக்டேராக மும்மடங்கு உயர்ந்துள்ளது. மண்ணின் உயிர்த் தன்மையையும் மற்றும் வளத்தையும் பாதுகாக்க, நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 206 கோடி ரூபாய் ஒதுக்கிட்டில் மண்ணுயிர் காத்து மன்னுயிர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

28. மாநிலத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களின் வருவாயை அதிகரிக்கும் நோக்கத்துடன் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பசும்பால் மற்றும் எருமைப்பாலுக்கு லிட்டர் ஒன்றிற்கு மூன்று ரூபாய் ஊக்கத்தொகையாக உயர்த்தி இந்த அரசு வழங்கி வருகிறது. 2021 ஆம் ஆண்டு முதல், நுகர்வோரின் நலனைப் பாதிக்காத வகையிலும் தமிழ்நாட்டின் சுமார் நான்கு இலட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையிலும் பால் கொள்முதல் விலை ஆறு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

29. வேளாண் தேவைகளுக்கான நீர் ஆதாரங்களை உயர்த்தும்பொருட்டு. கடந்த மூன்று ஆண்டுகளில் அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. அண்மையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால், 1,916 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அத்திக்கடவு அவினாசி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. ஈரோடு, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 24,468 ஏக்கர் நிலங்களுக்குப் பயனளிக்கும் 1045 ஏரிகள் மற்றும் குளங்களுக்கு, பவானி ஆற்றின் 15 டி.எம்.சி. உபரி நீரைப் பயன்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

மாநிலங்களுக்கு இடையே நதிகளின் நீரில் தனது நியாயமான பெறுவதற்குத் தேவையான பாயும் பங்கினைப் அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு எடுத்து வருகிறது. காவிரியின் குறுக்கே மேகதாது கட்டப்படுவதைத் தடுப்பதற்கான முயற்சிகளையும் மாநில மேற்கொள்ளும். அணை அனைத்து அரசு தொடர்ந்து

30. மீனவர்களின் பாதுகாப்பிற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதுடன், மாநிலத்தின் பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில், மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் இந்த அரசு முழு முனைப்பு கொண்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு முதல், இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 1219 மீனவர்களில், மாநில அரசின் அயராத முயற்சிகளின் Find

1106 மீனவர்கள் விடுவிக்கப்பட்டு தமிழ்நாட்டிற்குத் மீனவர்களை திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ள உடனடியாக விடுவித்திடவும். இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணவும், தூதரக நடைமுறைகள் மூலம் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஒன்றிய அரசை மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

31. தமிழ்நாட்டின் நீண்ட கடற்கரையும். வளமான பல்லுயிர்ப் பரவலாக்கமும் நீலப் பொருளாதாரத்தின் அபரிமிதமான ஆற்றலைப் பயன்படுத்துவதற்கான தனித்துவமான வாய்ப்பை அளித்துள்ளன. தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் (TN. SHORE) திட்டத்தின் கீழ், அடுத்த 5 ஆண்டுகளில் 1575 கோடி ரூபாய் செலவில், கடலோரப் பல்லுயிர்ப் பெருக்கம்.

கடற்கரைப் பாதுகாப்பு, கடற்கரையோரச் சமூகங்களின் வாழ்வாதார மேம்பாடு, கடலோரப் பகுதிகளின் மாசுக்கட்டுப்பாடு ஆகியவற்றில் அரசு தொடர் கவனம் செலுத்தும். இத்திட்டம் நமது கடல்சார் பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் கடலோரப் பகுதிகளின் நீடித்த நிலைத்த வளர்ச்சியை உறுதி செய்வதிலும் குறிப்பிடத்தக்க நன்மைகளைப் பயக்கும்.

32. களைந்து, மக்களின் குறைகளை உடனுக்குடன் சீரிய நிருவாகத்தை வழங்குவதற்கு இந்த அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. இதன் அடிப்படையில், பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்ற 30 நாட்களுக்குள் அரசின் முக்கியச் சேவைகளை அவர்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும் நோக்கத்துடன் மக்களுடன் முதல்வர் திட்டம் 2023 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக, நகர்ப்புரங்களில் 2,058 முகாம்கள் நடத்தப்பட்டு, 9.05 இலட்சம் மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டன.

நகர்ப்புர மக்களிடையே இத்திட்டம் பெற்ற பெரும் வரவேற்பைத் தொடர்ந்து, ஊரகப் பகுதிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, 2344 முகாம்கள் மூலம் 12,525 கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் முகாம்களில் 15 அரசுத் துறைகளின் சேவைகளை ஒருங்கிணைத்து 44 அத்தியாவசிய பொதுச் சேவைகளான பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகைக்கு விண்ணப்பித்தல் போன்ற பல சேவைகள் வழங்கப்பட்டன. இதன் பலனாக 1280 இலட்சம் மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டன. மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்குவதில் அரசிற்கு உள்ள அசைக்க முடியாத உறுதிப்பாட்டை இத்தகைய முயற்சிகள் நிலைநிறுத்தியுள்ளன.

33. சட்டம் ஒழுங்கைப் பொறுத்தவரை, சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. போதைப் பொருட்களுக்கு எதிராக பாரபட்சமற்ற கடுமையான அணுகுமுறையை இந்த அரசு தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. தொடர் சோதனைகள், சிறப்பு போதைப்பொருள் எதிர்ப்பு இயக்கங்கள், விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மேம்படுத்தப்பட்ட எல்லை சோதனைச் சாவடிகள் போன்ற நடவடிக்கைகளின் மூலம் இந்த அச்சுறுத்தலைத் தடுக்க அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.

மேலும், கணினிசார் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில், உயர் தொழில்நுட்பம் மற்றும் நவீன புலனாய்வு முறைகளைப் பயன்படுத்தி குற்றவாளிகளைக் கண்டுபிடித்துக் கைது செய்வதில் ஆக்கப்பூர்வமான பல முயற்சிகளை தமிழ்நாடு காவல்துறை எடுத்து வருகிறது.

மாநிலத்தில் அமைதி நிலவிடவும், பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்திடவும் அரசால் எடுக்கப்பட்டு வரும் தொடர் நடவடிக்கைகள் காரணமாக. தமிழ்நாட்டில் பெண்கள் அதிக அளவில் பணிபுரியும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, நாட்டின் மொத்தப் பெண் தொழிற் பணியாளர்களில் 41 சதவீதம் பெண்கள் தமிழ்நாட்டில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நமது மாநிலத்தில் நிலவும் அமைதியான, வளர்ச்சிக்கு உகந்த சூழலால் தமிழ்நாட்டை நோக்கி புதிய தொழில் முதலீடுகள் வந்த வண்ணம் உள்ளன.

34. நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சீரிய தலைமையின் கீழ், நமது மாநிலம் முதலீடுகளை ஈர்ப்பதில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. சுமார் 11,500 வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய 7,500 கோடி ரூபாய்க்கும் மேலான முதலீடுகளை ஈர்த்து. அண்மையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மேற்கொண்ட அமெரிக்கப் பயணம் பெரும் வெற்றியடைந்துள்ளது.

அதற்கு முத்தாய்ப்பாக, Aபோர்டு நிறுவனம் மீண்டும் சென்னையில் தனது உற்பத்தியை தொடங்குவதற்கான அறிவிப்பையும் வெளியிட்டது. நமது அரசின் அபராத முயற்சியால் 2021 ஆம் ஆண்டு முதல், இதுவரை 10 இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான தனியார் முதலீட்டுத் திட்டங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளன.

35. அனைவருக்கும் பயனளிக்கும் சமச்சீரான வளர்ச்சியை உறுதிசெய்திட மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக முதலீடுகளை ஈர்ப்பதில் மாநில அரசு தனிக் கவனம் செலுத்தி வருகிறது. அந்நிய முதலீடுகள் வாயிலாக பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் இராணிப்பேட்டை போன்ற தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்களில், அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய காலணி உற்பத்தித் துறையில் தற்போது பெரும் முன்னேற்றம் கண்டு வருகின்றன.

மாநிலத்தின் தென்பகுதியில் உள்ள தூத்துக்குடி. ஹைட்ரஜன் திட்டங்களுக்கான மையமாக மாறி வரும் வேளையில், சூரிய மின்கலன் மற்றும் அதன் தொகுப்புகளின் உற்பத்திக்கான பெருந்திட்டங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தகவல் தொழில்நுட்ப மையம், விண்வெளி மற்றும் பாதுகாப்பு, மின்னணு மற்றும் மின் வாகனங்களுக்கான மையமாக, மேற்கு மண்டலம், குறிப்பாக, கோயம்புத்தூர் மற்றும் ஓசூர் பகுதிகள் உருவாகி வருகின்றன.

இதற்கிடையில், மாநிலத்தின் வடக்கு மண்டலம், நாட்டின் வாகன உற்பத்தியின் தலைநகராக தனது முன்னிலையை தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறது. மாநிலம் முழுவதும் பரவலாக மேற்கொள்ளப்படும் முதலிடுகள், அனைத்துப் பகுதிகளிலும் சமமான மற்றும் சீரான முன்னேற்றத்தை உருவாக்கிட அயராது உழைத்திடும் தமிழ்நாடு அரசின் தொலைநோக்குப் பார்வையை பறைசாற்றுகிறது.

36. மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில், தொழிற்பூங்காக்களை 45.000 புதிய நிறுவிடத் தேவைப்படும் ஏக்கர் நிலங்களைக் கண்டறிந்து, இதுவரை 14,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் நிறைவடைந்துள்ளது. சமச்சீரான தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் தஞ்சாவூர், பெரம்பலூர், தருமபுரி மற்றும் தேனி மாவட்டங்களில் புதிய சிப்காட் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

தொழிலாளர்கள் நலன் பேணும் வகையில் தொழிற்சாலைப் பணியாளர்களுக்கான தங்குமிடங்களை ஏற்படுத்த அரசு முன்னோடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், வல்லம் வடகாலில் 706 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்ட 18,720 படுக்கைகள் கொண்ட தொழிற்சாலைப் பணியாளர்களுக்கான இந்தியாவின் மிகப்பெரிய வீட்டுவசதித் திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அண்மையில் தொடங்கி வைத்தார்கள். இதேபோன்று, மாநிலம் முழுவதும் பெண்களுக்குப் பாதுகாப்பான வசதியான தங்குமிட வசதிகள் கிடைப்பதை உறுதிசெய்திட பணிபுரியும் மகளி விடுதிகள் கழகம் தோழி விடுதிகளை உருவாக்கி வருகின்றது.

37. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தொலைநோக்கு முயற்சியான டைடல் பூங்கா சென்னை ராஜீவ் காந்தி சாலையில், 2000 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதன் மூலம், தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பப் புரட்சிக்கு வித்திடப்பட்டது. அந்த அடிச்சுவடுகளைப் பின்பற்றி நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இத்தகைய வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் டைடல் பூங்காவையும்.

தஞ்சாவூர், சேலம், விழுப்புரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் மினி டைடல் பூங்காக்களையும். திருச்சி. கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் எல்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களையும் தொடங்கி வைத்துள்ளார். தகவல் தொழில்நுட்பம் மற்றும் இத்துறை சார்ந்த தொழில்களின் வளர்ச்சிக்கான உகந்த சூழலை உருவாக்குவதிலும், பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் இப்பூங்காக்கள் பெரிதும் உதவும்.

38 உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்க்கைமுறையிலும் தொழில்துறையிலும் பெரும் புரட்சியை ஏற்படுத்திவரும் செயற்கை நுண்ணறிவுத் துறையில், ஒரு முதன்மையான இடத்தை தமிழ்நாடு பெறவேண்டுமென இந்த அரசு விரும்புகிறது. இதற்காக, கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், ஆராய்ச்சி, மருத்துவம் போன்ற துறைகளில் கவனம் செலுத்தும் செயற்கை நுண்ணறிவு (Al) இயக்கத்தை இந்த அரசு தொடங்கியுள்ளது. இந்த இயக்கம் அடுத்த 5 ஆண்டுகளில், இந்தியாவின் முன்னணி செயற்கை நுண்ணறிவு மையங்களில் ஒன்றாக தமிழ்நாட்டை நிலைநிறுத்தும் என்பதில் ஐயமில்லை.

39. நமது மாநிலத்தில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் குறு. சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு முக்கியமானது என்பதை இந்த அரசு முழுமையாக உணர்ந்துள்ளது. கோவிட் பெருந்தொற்றுக்குப் பிந்தைய கடினமான காலகட்டத்தில் இத்துறையின் தேவைகளை நிறைவு செய்திடவும், கடன்களுக்கான உத்தரவாதங்களை நிதிநிறுவனங்களுக்கு வழங்கிடும் வகையிலும், தமிழ்நாடு கடன் உத்தரவாதத் திட்டம் என்ற திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது. இதன் விளைவாக, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு 2023-24 ஆம் நிதியாண்டில் 4,115 கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 100 சதவீதம் அதிகமாகும்.

40. தமிழ்நாடு புத்தொழில் இயக்க நிதியம் (TANSEED) ஆதிதிராவிடர் / பழங்குடியினருக்கான புத்தொழில் நிதி மற்றும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கை போன்ற மாநில அரசின் திட்டங்களின் மூலம் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான புத்தொழில்கள் (Startup) தொடங்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது.

41. பல்வேறு துறைகளில் அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனை மேம்படுத்த அரசு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தமிழ்நாடு அரசின் சீரிய நடவடிக்கைகளின் மூலம், 18 அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் 285 இலட்சம் தொழிலாளர்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டு, மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை சுமார் 46 இலட்சமாக உயர்ந்துள்ளது. இந்த நிதியாண்டில் மட்டும் பல்வேறு நலத்திட்டங்கள் வாயிலாக அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தின் 6.88 இலட்சம் பயனாளிகளுக்கு 576 கோடி ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. நடவடிக்கைகள், அரசின் தமிழ்நாட்டின் இத்தகைய அனைத்து தொழிலாளர்களின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்கு உந்துசக்தியாக அமைந்துள்ளன.

42. சேவைத் துறையில் முதலீடுகளைக் கொணர்ந்து, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திட நகர்ப்புரங்களை மேம்படுத்துவது மிகவும் இன்றியமையாதது. அதிகரித்து வரும் நகர்ப்புர மக்கள்தொகையின் தேவைகளை நிறைவுசெய்யவும். நகர்ப்புரங்களில் பொருளாதார வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கவும், நகர்ப்புர மேம்பாட்டிற்கு அரசு கணிசமான நிதி ஒதுக்கீடுகளைச் செய்து வருகிறது.

நாட்டிலேயே அதிக அளவில் தமிழ்நாடு நகரமயமாகிய நிலையில், கலைஞர் நகர்ப்புர மேம்பாட்டுத் திட்டம். சிங்காரச் சென்னை 20, நகர்ப்புர சாலை மேம்பாட்டுத் திட்டம், கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் போன்ற திட்டங்களின் மூலம் வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புரங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், குடியிருப்புகளுக்கான கட்டமைப்பு மற்றும் சேவைகளை வழங்குதலை அரசு திறம்பட மேற்கொண்டு வருகிறது.

43 சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் சமச்சீரான வளர்ச்சியை உறுதிசெய்யும் நோக்கில் தமிழ்நாடு அரசு வடசென்னை வளர்ச்சித் திட்டம் என்ற இலட்சியத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்த முன்முயற்சியானது. சென்னையிலுள்ள வளர்ச்சி குறைந்த பகுதிகளை மேம்படுத்தவும். மாநகரின் வளர்ச்சிப் பாதையில் அவற்றை வடசென்னை 6.309 கோடி மருத்துவமனைக் ஒருங்கிணைக்கவும் முயல்கிறது. வளர்ச்சித் திட்டத்தின் கீழ், ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிகள், கட்டடங்கள், நீர்நிலைகள், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள், பேருந்து முனையங்கள் 252 போன்ற மேற்கொள்ளப்பட்டுள்ளன. பணிகள்

44. நகர்ப்புர சுற்றுச்சூழலை மேம்படுத்தி மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் வகையில், தமிழ்நாட்டிலுள்ள 18 மாநகராட்சிகள் மற்றும் 93 நகராட்சிகளில் உயிரி அகழ்ந்தெடுத்தல் (bio-mining) திட்டங்களை மாநில அரசு தொடங்கியுள்ளது. இதன் மூலம் பல ஆண்டுகளாகக் குவிந்துள்ள பழைய கழிவுகள் அகற்றப்பட்டு, அப்பகுதிகள் பூங்காக்களாகவும், பசுமைப் பகுதிகளாகவும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த முறையில், சென்னை- பெருங்குடி குப்பைக் கிடங்கில் குப்பைகளைத் தரம் பிரித்து அகற்றும் செயல்முறை மூலம் 96 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது.

45 தமிழ்நாட்டில் அரசு-தனியார் பங்களிப்பின் மூலம் சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டில் கணிசமான முதலீடுகளை ஈர்க்கவும், உலகத் தரம் வாய்ந்த சாலைக் கட்டமைப்புத் திட்டங்களை தலைசிறந்த மேலாண்மை நடைமுறைகளைக் கொண்டு செயல்படுத்தவும், தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையத்தை (TANSHA) அரசு உருவாக்கியுள்ளது. அரசின் இத்தகைய முயற்சிகள், மாநிலம் முழுவதும் பாதுகாப்பான மற்றும் விரைவான போக்குவரத்திற்கு உதவும்.

46 தொழில் புரிவதை எளிதாக்கவும். அரசின் கடைப்பிடிக்க சேவைகளைப் பெற பொதுமக்கள் வேண்டிய சட்டவிதிகளை எளிமையாக்கவும் SimpleGov முன்னெடுப்பின் மூலம் பெரும் நிருவாகச் சீர்திருத்தங்களை அரசு மேற்கொண்டு வருகிறது. கட்டடத் திட்ட வரைபட ஒப்புதலினை சுய சான்றிதழ் அடிப்படையில் விரைவாக வழங்குவதற்காக அண்மையில் ஒரு புதிய திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இத்திட்டத்தின் கீழ், கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 36,134 பயனாளிகள் விண்ணப்பித்து 47 இணையவழியில் கட்டட வரைபட அனுமதி பெற்றுள்ளனர்.

47. கடந்த மூன்று ஆண்டுகளாக பிரதமர் அவர்களிடம் முதலமைச்சர் அவர்கள் முன்வைத்த தொடர் வேண்டுகோளின் அடிப்படையில், சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கு, 50.50 என்ற விகிதத்தில் பங்குமூலதன உதவி வழங்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கைக்கு ஒன்றிய அரசு இறுதியாக ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் திட்டமிட்டவாறு இப்பணிகளை முடிக்க வழிவகை ஏற்பட்டுள்ளது. மேலும், மாநில அரசு கருத்துரு அனுப்பியுள்ள மதுரை மற்றும் கோயம்புத்தூர் மெட்ரோ இரயில் திட்டங்களுக்கும் ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

48. சிறந்த பேருந்து வசதிகளை மக்களுக்கு வழங்க தமிழ்நாடு அரசு உறுதிகொண்டுள்ளது. கடந்த மூன்றாண்டுகளில் 2,578 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்து இயக்கிவரும் நிலையில், மேலும் 6,104 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. போக்குவரத்துக் கழகங்களின் இயங்குதிறன் மற்றும் செயல்திறனை உறுதிசெய்வதுடன். இழப்பீட்டு நிதி ஆதரவினையும் (Viability Gap Funding) இந்த அரசு அளித்து வருகிறது. புதிய பேருந்துகள், பணிமனைகள். பேருந்து நிலையங்கள், ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை அமைப்புகள் (ITMS) ஆகியவற்றின் மூலம், குடிமக்களுக்குப் பாதுகாப்பான, நம்பகமான பொதுப் போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மாநில மேற்கொண்டு வருகிறது. அரசு

49. மின்துறையில் ஏற்படும் இழப்புகளைக் குறைக்கவும், அதன் செயல்திறனை மேம்படுத்தவும். குறிப்பிடத்தக்க பல சீர்திருத்தங்களை குறுகியகாலத்தில் அரசு மேற்கொண்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் (TANGEDCO) செயல்பாடு மற்றும் நிர்வாகத் திறனை மேம்படுத்திட தமிழ்நாடு மின் உற்பத்தி நிறுவனம் (TNPGCL) மற்றும் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL) என இரண்டு நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டது.

இத்துடன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இத்துறையின் செயல்பாடுகளை நிருவகித்திட, தனியாக தமிழ்நாடு பசுமை எரிசக்தி நிறுவனத்தையும் (TNGECL) அரசு உருவாக்கியுள்ளது. மின் நுகர்வோருக்குத் தேவையான சேவைகளை எளிதாகவும் உடனடியாகவும் வழங்கிடும் நோக்கில் கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மின்னகம்’ எனும் மின் நுகர்வோர் சேவை மையத்தின் வாயிலாக, பெயர் மாற்றம், புதிய மின் இணைப்பு வழங்குதல் மற்றும் இதர புகார்கள் உள்ளிட்ட 3141 இலட்சம் கோரிக்கைகளுக்கு இதுவரை தீர்வு காணப்பட்டுள்ளன.

50. மாநிலத்தில் புயல், பெருமழை மற்றும் வரலாறு காணாத வெள்ளம் உள்ளிட்ட தொடர் இயற்கைப் பேரிடர்களால், தேவையான கட்டமைப்பு மற்றும் சேவைகளை வழங்குவதில் சவால்கள் அதிகரித்துள்ளன, அடிக்கடி ஏற்படும் தீவிர வானிலை மாற்றங்கள் அண்மைக்காலங்களில் கணிசமாக அதிகரித்துள்ளதுடன், மாநிலத்தின் சில பகுதிகள் ஒரு முழு ஆண்டிற்கான ஒட்டுமொத்த மழையை 24 மணி நேரத்திற்குள் பெற்றுள்ளன.

திட்டமிடுதல், முன்னெச்சரிக்கை மற்றும் துயர் தணிப்பு நடவடிக்கைகளை அரசு சிறப்பாக மேற்கொண்டபோதிலும், இத்தகைய காலநிலை மாற்றங்கள் பொதுமக்களின் வாழ்வாதாரம் மற்றும் மாநிலத்தின் கட்டமைப்புகளுக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. கணிசமான அண்மையில் தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் பெரும் சேதத்தை விளைவித்த ஃபெஞ்சல் புயல், 40 உயிரிழப்புகளை ஏற்படுத்தியதுடன் பொதுமக்களின் சொத்துகள் மற்றும் கட்டமைப்புகளுக்குப் ஏற்படுத்தியுள்ளது.

பெரும் இப்பேரிடரால் சேதத்தை மிகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிவாரணமாக 2,000 ரூபாய் மாநில அரசால் வழங்கப்பட்டது. எனினும், தற்காலிக மற்றும் நிரந்தர நிவாரணப் பணிகளையும். மறுசீரமைப்புப் பணிகளையும் மேற்கொள்வதற்காக கூடுதல் நிதி தேவைப்படுவதால், தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மாநில அரசு கோரியுள்ளவாறு 6,675 கோடி ரூபாயை ஒன்றிய அரசு விடுவித்திட வேண்டும்.

51. டாக்டர் அரவிந்த் பனகாரியா அவர்களின் தலைமையிலான 16-வது நிதிக்குழு தமிழ்நாட்டிற்கு வருகை தந்தபோது நமது கோரிக்கைகள் அனைத்தும் முன்வைக்கப்பட்டன. அவற்றில், மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வை 50 சதவீதமாக அதிகரித்தல், மாநிலங்களுக்கு இடையிலான நிதிப் பகிர்வுக்கு முற்போக்கான கணக்கீட்டு முறையைப் பின்பற்றுதல், மறுபகிர்வு என்ற பெயரில் வளர்ந்த மாநிலங்களுக்கு இழப்பு ஏற்படுத்துவதைத் தவிர்த்து, அவர்களின் செயல்திறனுக்கு உரிய நிதிப்பகிர்வை அளித்தல், வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புர மக்கள்தொகை.

அடிக்கடி ஏற்படும் இயற்கைப் பேரிடர்கள் மற்றும் முதியோர் மக்கள்தொகை போன்ற குறிப்பிட்ட சவால்களை எதிர்கொள்வதற்கான நிதி ஆதாரங்களை ஒதுக்குதல் ஆகியவை முக்கியமானதாகும். தமிழ்நாட்டின் அறிக்கை குறித்து ஆணையம் தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துள்ள நிலையில், நமது அரசால் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள முற்போக்கான வழிமுறைகளை தற்போதைய நிதிக்குழு பரிந்துரைக்கும் என நம்புகிறோம்.

52. இவ்வரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை, 2,322 திருக்கோவில்களில் திருப்பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு திருக்குடமுழுக்குகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், 6,882 கோடி ரூபாய் மதிப்புள்ள 7,133 கோவில் ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்புகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. மட்டுமின்றி, 9,681 இது திருக்கோவில்களில் 5,486 கோடி ரூபாய் செலவில் 21,908 திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. திருத்தலங்களின் ஒருங்கிணைந்த பெருந்திட்டத்தின் ஒரு பகுதியாக. 1,770 கோடி ரூபாய் செலவில் வளாகங்களில் 19 கூடுதல் கோவில் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

53. கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில், வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நினைவு விழாவில் பங்கேற்ற மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், வைக்கம் வீரர் தந்தை பெரியார் அவர்களின் மறுசீரமைக்கப்பட்ட நினைவகம் மற்றும் நூலகத்தினை திறந்துவைத்தார்.

வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியாரின் தீவிர ஈடுபாடும், குறிப்பாக கோவில் நுழைவு இயக்கத்திற்கான அவரது பங்களிப்பும் இந்தியாவில் சமூகநீதி மற்றும் சமத்துவத்திற்கான பாதையை வகுத்தன. பெரியாரின் வழியில் வந்த நமது அரசானது. பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிடும் வகையில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தினைச் செயல்படுத்தியது. தற்போது

பழனி, மதுரை, திருச்செந்தூர், திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம் மற்றும் திருவல்லிக்கேணி ஆகிய இடங்களில் இயங்கி வரும் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் இதுவரை 286 மாணவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.

54. சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்கு உரிய அரணாக விளங்கிடும் இந்த அரசு அவர்கள் நலனைக் காத்திடும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. சிறுபான்மையினரின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கான நிரந்தரச் சான்றிதழ்களை இணையவழியில் எளிமையாக வழங்கிட இந்த அரசு உத்தரவிட்டது. மேலும் சிறுபான்மைச் சமூகங்களின் வழிபாட்டுத்தலங்களை புனரமைத்துப் பாதுகாக்கும் பொருட்டு கணிசமான செய்யப்பட்டுள்ளது.

55. முதலமைச்சர் அவர்களால் திறந்துவைக்கப்பட்ட கீழடி அருங்காட்சியகம், சர்வதேச அளவில் பெரும் பாராட்டுகளைப் பெற்றதுடன். இதுவரை, உலகெங்கும் இருந்து 6 இலட்சத்திற்கும் மேலான பொதுமக்களும் பார்வையிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கை ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் போது கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களைக் கொண்டு, திருநெல்வேலியில் உலகத் தரம்வாய்ந்த பொருநை அருங்காட்சியகம் நிறுவுவதன் மூலம், தமிழ்ப் பண்பாட்டின் வளமான, காலத்தைக் கடந்து நிற்கும் பழம்பெருமையினை உலகிற்கு வெளிப்படுத்திட இந்த திட்டமிட்டுள்ளது.

மேலும், இராஜேந்திர சோழனின் கடல் கடந்த வெற்றிப் பயணம் மற்றும் அயல்நாட்டு வணிகத் தொடர்புகளை நினைவுகூறும் வகையில், கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது எட்டு அரசு இடங்களில் தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளும், கொற்கை துறைமுகப் பகுதியில் முன்கள ஆய்வும். நடைபெற்று வருகின்றன.

56. வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்டது தமிழ்நாடு – பாரதி. மகாகவி பாரதியின் மேற்குறிப்பிட்ட கூற்றிற்கிணங்க, “வான்புகழ் கொண்ட திருவள்ளுவரை இவ்வுலகிற்கே கொடையளித்து, தமிழ்நாடு பெரும்புகழ் அடைந்துள்ளது. கன்னியாகுமரியில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் பேரறிவின் சிலையாக நிறுவப்பட்ட அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு இந்த ஆண்டு வெள்ளிவிழா ஆண்டாகும்.

திருவள்ளுவர் தனது 133 அதிகாரங்கள் மூலம் அன்பு, அறநெறி மற்றும் சமத்துவத்தின் பெருமைகளை உலகெங்கும் ஒலிக்கச் செய்துள்ளார். இந்த வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு, குமரி முனையில் விவேகானந்தர் அமைந்துள்ள பாறையையும் திருவள்ளுவர் சிலையையும் இணைக்கும் வகையில், நாட்டிலேயே முதலாவதாக அமைக்கப்பட்ட கண்ணாடி இழைப் பாலத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். இந்த வெள்ளிவிழா ஆண்டு கொண்டாடப்படுவது, திருவள்ளுவரின் மாண்பினைப் போற்றுவதற்கும், எதிர்காலச் சந்ததியினருக்கு திருக்குறளின் உயரிய கருத்துகளை செல்வதற்கும் உரிய வாய்ப்பாக அமையும். எடுத்துச்

57. சுயமரியாதை, சமூகநீதி, சமத்துவம், பகுத்தறிவுச் சிந்தனை மற்றும் பரிவு ஆகிய கொள்கைகளைச் சிறிதளவும் பிறழாது கடைப்பிடிக்க இந்த அரசு உறுதிகொண்டுள்ளது. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர். பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற பெருந்தலைவர்களின் சிந்தனைகள் மற்றும் கொள்கைகள் இந்த அரசை தொடர்ந்து வழிநடத்தி வருகின்றன.எதிர்காலத்திலும் வழிநடத்தும்.

58. நமது அரசு பொறுப்பேற்றது முதல் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அவர்களது எதிர்பார்ப்புகளுக்கும் மேலாகவே நிறைவேற்றியுள்ளதுடன், குறுகியகாலத்தில் செய்த இச்சாதனைகள் குறித்தும், ஒருமித்த முன்னேற்றம் குறித்தும் இந்த அரசு பெருமிதம் கொள்கிறது. தமிழ்நாட்டு மக்களின் நல்வாழ்வு மற்றும் வளத்திற்காக தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயலாற்றி, மாபெரும் தமிழ்க் கனவை நனவாக்கிட இந்த அரசு முழுமூச்சுடன் பாடுபடும்.

நமது அரசின் மீது தமிழ்நாட்டு மக்கள் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையினை அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தல் முடிவுகள் மூலம் வெளிப்படுத்தியமைக்குத் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், நாட்களிலும் இந்த அந்நம்பிக்கையினை இனிவரும் அரசு தவறாது காத்திடும்.

ஒட்டுமொத்த நாட்டிற்கும், சமூகநீதி, மத நல்லிணக்கம், பகுத்தறிவுச் மற்றும் சிந்தனை மக்களாட்சிக் கோட்பாடுகளுக்கு வழிகாட்டியாக தமிழ்நாடு தொடர்ந்து திகழ்வதை இந்த அரசு உறுதி செய்யும். நாட்டின் பிற மாநிலங்கள் மட்டுமன்றி, தெற்காசியாவிற்கே முன்மாதிரி மாநிலமாகவும், தமிழ்நாட்டை உருவாக்கிட இந்த அரசு மேற்கொள்ளும், அனைத்து முயற்சிகளையும்

59. அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை இனிய பொங்கல் நல்வாழ்த்துகளைத் எனது தெரிவித்துக்கொண்டு, மகாகவி பாரதியாரின் காலத்தால் அழியாத கவிதை வரிகளுடன் எனது உரையை நிறைவு செய்கிறேன்.

வாழிய செந்தமிழ்|

வாழ்க நற்றமிழர்

வாழிய பாரத மணித்திருநாடு!