கொரோனாவால் எனக்கு 2 நல்ல விஷயம் நடந்திருக்கிறது: வனிதா
வனிதா விஜயகுமாருக்கும், பீட்டர் பாலுக்கும் திருமணமாகி இன்றுடன் ஒரு மாதம் ஆகிறது. பீட்டர் பால் மீது அவரின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் காவல் நிலையத்தில் புகார் அளித்ததில் இருந்து சமூக வலைதளங்களில் வனிதாவை பலரும் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தான் யார் வாழ்க்கையையும் கெடுக்கவில்லை, ஏழரை ஆண்டுகளாக ஆதரிக்க ஆள் இல்லாமல் தனியாக இருந்த பீட்டர் பாலை தான் திருமணம் செய்தேன் என்று வனிதா விளக்கம் அளித்துள்ளார். இருப்பினும் அவரை சமூக வலைதளங்களில் பலரும் மோசமாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.
தன்னை கேவலமாக பேசுபவர்களை வனிதா ட்விட்டரில் விளாசித் தள்ளுகிறார். யூடியூப் சேனலில் தன்னை மோசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்த சூர்யா தேவி மீது வனிதா சென்னை துணை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் சூர்யா தேவியை கைது செய்தார்கள். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சூர்யா தேவியின் குழந்தைகள் நலனை மனதில் வைத்து அவருக்கு ஜாமீன் கொடுக்க தான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றார் வனிதா.
இந்நிலையில் சூர்யா தேவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் சூர்யா தேவியிடம் விசாரணை நடத்திய பெண் போலீசுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை பார்த்தவர்கள் அப்படி என்றால் வனிதா அக்காவுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பினார்கள்.
சூர்யா தேவியை தாக்கிய கொரோனா வைரஸ் வனிதாவுக்கு சாதகமாக இருப்பது போன்று ஒருவர் மீம்ஸ் போட்டிருந்தார். அதை பார்த்த வனிதா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
சிரிக்கக் கூடாது தான் ஆனாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. இருப்பினும் கொரோனா என்னிடம் அன்பாக உள்ளது. என் சோல்மேட்டை கண்டுபிடிக்க உதவியது, என் சேனல் பெரிய அளவில் வெற்றி பெறச் செய்தது… அதனால் கொரோனாவுக்கும் என்னை பிடித்திருக்கிறது என்று நினைக்கிறேன் என்றார்.
முன்னதாக வனிதாவுக்கு கொரோனா பாதிப்பு என்று தகவல் வெளியானபோது அதை பார்த்த அவரின் ரசிகர்களோ, அக்காவுக்கு கொரோனாவா, அந்த கொரோனாவுக்கு எம்புட்டு தைரியம் என்று கூற அதை பார்த்து வனிதா சிரித்தார்.
தன்னை பற்றி ஜாலியாக போடப்படும் மீம்ஸுகளை வனிதா ட்விட்டரில் ரீட்வீட் செய்கிறார். அதே சமயம் மோசமாக விமர்சித்து வரும் மீம்ஸுகளை பார்த்து விளாசவும் செய்கிறார். அடுத்தவர்களை கிண்டல் செய்வது தவறு என்று வனிதா கூறியுள்ளார்.
Lol cant stop laughing though I shouldn't.. but corona has been so kind to me..made me find my soul mate, made my channel a huge success ..so I guess corona loves me too https://t.co/vn2tSiazN1
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) July 26, 2020