‘இந்தியாவிலேயே முதன்முறையாக புற்றுநோய்களைக் கண்டிறிய முழு பரிசோதனை!’ : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

0
85

‘இந்தியாவிலேயே முதன்முறையாக புற்றுநோய்களைக் கண்டிறிய முழு பரிசோதனை!’ : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், 2025 – 26 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை அறிவிப்புடன், கடந்த மார்ச் 14ஆம் நாள் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் கடந்த ஒரு வாரமாக தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் விடையளிக்கும் வகையில், வினா – விடை நேரம் நடைபெற்று வருகிறது.

அதன் பகுதியாக, சுகாதாரத்துறை சார்ந்து கேட்கப்பட்ட கேள்விக்கு, விடையளுக்கும் போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழ்நாடு சிறுமிகள் கருப்பை வாய் புற்றுநோய்களால் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் 14 வயதுடைய சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்த முதற்கட்டமாக ரூ.37 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது தமிழ்நாடு அரசு.

அதுமட்டுமல்லாமல், இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டின் வருவாய் மாவட்டங்களில் அனைத்து வகையான புற்றுநோய்களையும் கண்டறிய முழு பரிசோதனை சேவை, 10 நாட்களில் தொடங்கப்பட உள்ளன.

இரு வாரங்களுக்கு முன்பு கூட, ஒன்றிய அமைச்சரை சந்தித்து புதிதாக 50 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 500 துணை சுகாதார நிலையங்களும் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளோம்.

ஒப்புதல் கிடைத்த பிறகு, தமிழ்நாடு முழுவதும் இடங்களைக் கண்டிறிந்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்.” என தெரிவித்தார்.