வடகிழக்கு பருவமழை பாதிப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை

0
108

வடகிழக்கு பருவமழை பாதிப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை

சென்னை, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது சென்னைக்கு அருகே இன்று மாலை கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், சென்னையில் நேற்று மாலை 3 மணிக்கு தொடங்கிய மழை இரவு முழுவதும் விடிய, விடிய கொட்டித் தீர்த்தது.

மேலும் தற்போது வரை சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையின் முக்கிய சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது. சென்னை மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தீவிரமைடைந்துள்ள நிலையில் மழையின் பாதிப்பு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைசெயலகத்தில் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதில் தாழ்வான இடங்களில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பது, மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் இருக்கும் மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பது, மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க உள்ள நிவாரண உதவி பற்றி ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் தலைமை செயலர் இறையன்பு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்கிற்றுள்ளனர்.