ரூ.1க்கு 3 வேளையும் உணவு.. ‘எனது இதயத்தையும் நனைத்துவிட்டது’: ஈரோடு தம்பதிக்கு முதலமைச்சர் பாராட்டு!
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதிகள் வெங்கட்ராமன், ராஜலட்சுமி. இவர்கள் ஈரோடு அரசு மருத்துவமனை அருகே AMV என்ற உணவகம் ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்த உணவகத்தில், அரசு மருத்துவமனையில் நோயாளிகளுடன் தங்கி அவர்களைக் கவனித்து வருபவர்களுக்கு மூன்று வேளையும் ரூ.1-க்கு உணவு வழங்கி வருகின்றனர். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 20% சலுகை விலையில் உணவு வழங்கி வருகின்றனர்.
ரூ.1க்கு 3 வேளையும் உணவு.. ‘எனது இதயத்தையும் நனைத்துவிட்டது’: ஈரோடு தம்பதிக்கு முதலமைச்சர் பாராட்டு!
இப்படி இவர்கள் ஒருநாள் அல்ல கடந்த 15 ஆண்டுகளாக இந்த சேவையை செய்து வருகின்றனர். மேலும் தரமான உணவும் வழங்கப்படுகிறது. “கிராமத்திலிருந்து நோயாளிகளுடன் தங்கி அவர்களைப் பார்த்துக் கொள்பவர்கள் உணவுக்காக மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அவர்கள் சிரமத்தை போக்கும் விதமாக சேவை மனப்பான்மையுடன் கடந்த 15 வருடங்களாக உணவு கொடுத்து வருவதாக” வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.
"மண்டினி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்;
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே" என மணிமேகலை காட்டும் வழியில் மானுடம் போற்றி, எளியோரின் பசியாற்றும் ஈரோடு வெங்கட்ராமன் – ராஜலட்சுமி இணையரின் ஈரமனது எனது இதயத்தையும் நனைத்துவிட்டது.ஈதல்!
இசைபட வாழ்தல்!
இதுவே தமிழறம்!https://t.co/TDaENX2DOS— M.K.Stalin (@mkstalin) August 31, 2022
இந்நிலையில், இந்த தம்பதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவில், “மண்டினி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்; உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே” என மணிமேகலை காட்டும் வழியில் மானுடம் போற்றி,
எளியோரின் பசியாற்றும் ஈரோடு வெங்கட்ராமன் – ராஜலட்சுமி இணையரின் ஈரமனது எனது இதயத்தையும் நனைத்துவிட்டது. ஈதல்! இசைபட வாழ்தல்! இதுவே தமிழறம்!” என தெரிவித்துள்ளார்.