ராமர், லட்சுமணன்போல் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருக்கின்றனர்- உதயகுமார்

0
234

ராமர், லட்சுமணன்போல் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருக்கின்றனர்- உதயகுமார்

முதல்வரும் துணை முதல்வரும் ராமர் லட்சுமணன் போல் ஒற்றுமையாக உள்ளனர் என வருவாய்த்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

அதிமுக கட்சியினுள் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த சர்ச்சை கிளம்பியுள்ள நிலையில், அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அவர் பேசும் போது  அதிமுக ராணுவ கட்டுப்பாடுடன் இயங்கி வருகிறது. முதல்வரும், துணை முதல்வரும் அன்பு என்னும் கட்டுபாட்டுக்குள் தொண்டர்களை வைத்திருக்கிறார்கள். ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் பரபரப்பை அடிப்படையாக கொண்டு வெளிவருகிறதே தவிர மற்ற படி முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் ராமன் லட்சுமணனுக்கு இடையே இருக்கும் புரிதல் இருக்கிறது. இது சத்தியம். மேலும் பேசிய அவர் இளைஞர்கள் அதிமுகவில் இணைய தாமாக முன்வந்து முன்வந்து கொண்டிருக்கின்றனர் என்றார்.