முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்

0
207

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்

நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தியாவின் 13வது குடியரசுத் தலைவராக இருந்தவர் பிரணாப் முகர்ஜி (84). இவர் கடந்த 10ஆம் தேதி உடல்நிலை குறைபாடு காரணமாக டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மூளையில் சிறுகட்டி இருந்ததாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட அவருக்கு, நுரையீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பும் உறுதி செய்யப்பட்டிருந்தது.

கோமாவில் இருந்த அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது இறந்த தகவலை அவரது மகன் அபிஜிட் முகர்ஜி ட்விட்டரில் உறுதி செய்துள்ளார்.