பிகார் மேலவைக்கான இடைத் தேர்தல் அறிவிப்பு

0
199

பிகார் மேலவைக்கான இடைத் தேர்தல் அறிவிப்பு

புதுதில்லி, ஜனவரி 06, 2021

பிகார் மேலவையில் இரண்டு உறுப்பினர் காலியிடங்களுக்கான இடைத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பிகார் மேலவை உறுப்பினராக இருந்த வினோத் நாராயண் ஜா, சட்டப்பேரவைக்கு  தேர்வு செய்யப்பட்டார். மற்றொரு உறுப்பினர் சுஷில் குமார் மோடி, தனது பதவியை  கடந்த மாதம் 9ம் தேதி ராஜினாமா செய்தார்.

இந்த இரு மேலவை உறுப்பினர் காலியிடங்களுக்கான இடைத் தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இரு மேலவை உறுப்பினர்களையும், சட்ட மன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யவுள்ளனர். இந்த இடைத் தேர்தல் ஜனவரி 28ம் தேதி நடக்கிறது. அன்று மாலையே ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இதற்கான  ஏற்பாடுகளைச் செய்யும்படி, பிகார் தலைமைச் செயலாளருக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.