பள்ளி, கல்லூரிகளில் காவல் துறை சார்பில் புகார் பெட்டி!!

0
136

பள்ளி, கல்லூரிகளில் காவல் துறை சார்பில் புகார் பெட்டி!!

உசிலம்பட்டி நகர் காவல் நிலையம் சார்பாக மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி கல்லூரிகளில் மாணவ மாணவிகளுக்கு புகார் பெட்டி பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டது.

உசிலம்பட்டி நகர் காவல் நிலையம் சார்பாக மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி கல்லூரிகளில் மாணவ மாணவிகளுக்கு புகார் பெட்டி பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் காவல் நிலையம் சார்பாக உசிலம்பட்டி பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரியில் மாணவ மாணவிகள் தங்களது பிரச்சனை மற்றும் அச்சுறுத்தல்களை புகார் மூலம் தெரிவிக்க காவல் நிலையம் சார்பாக 14 புகார் பெட்டிகள் வைக்கப்பட்டு உள்ளது.

இதில் மாணவ மாணவிகள் தங்களுடைய புகார்களை தெரிவிக்கலாம் என உசிலம்பட்டி நகர எஸ்.எஸ்.ஐ சார்பு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, தலைமை காவலர் கருப்பசாமி உசிலம்பட்டி டி. இ.எல்.சி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மார்க்ரெட் கிரேஸியா மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் தங்களுடைய பிரச்சினைகளுக்கு விழிப்புணர்வாக இருக்குமென தெரிவித்தனர்.