நொடிப்பொழுதில் ரயில் விபத்தில் இருந்து தப்பிய வாலிபர்.. சிசிடிவி காட்சியைப் பாருங்க.. நீங்களே மிரண்டுருவீங்க..!

0
227

நொடிப்பொழுதில் ரயில் விபத்தில் இருந்து தப்பிய வாலிபர்.. சிசிடிவி காட்சியைப் பாருங்க.. நீங்களே மிரண்டுருவீங்க..!

ரயிலில் அடிபட்டு ஏற்படும் விபத்துக்களை குறைக்கத் தான் சிக்னல் வைத்து கேட் அடைக்கப்படுகிறது. இங்கே அப்படித்தான் கேட் அடைக்கப்பட்டதும் நடந்த ஒரு சம்பவம் உலகையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

நெதர்லாந்து நாட்டில் கேட்டில் காத்து நின்றார் ஒரு வாலிபர். அவர் தனது சைக்கிளை கேட்டின் கீழ்பகுதி வழியாக சரித்தவாறு நுழைத்து தண்டவாளத்தின் அருகில் வந்து நின்றார். தொடர்ந்து அவர், அந்த தண்டவாளத்தில் சரக்கு ரயில் ஒன்றைக் கடப்பதைப் பார்த்தார்.உடனே ரயில் போய்விட்டதென சைக்கிளை எடுத்துக்கொண்டு தண்டவாளத்தைக் கடந்தார்.

அப்போது மற்றொரு தண்டவாளத்தில் மின்னல் வேகத்தில் இன்னொரு ரயில் வந்து கொண்டிருந்தது. இவர் அந்த தண்டவாளத்தைக் கடப்பதற்கும், ரயில் இவரைத்தாண்டி செல்வதற்கும் இடையே முழுதாக ஒரு நொடிதான் வித்தியாசம். தெய்வாதீனமாக தப்பித்தேன் எனச் சொல்வார்களே அதைக் கண்முன்னே பார்ப்பதுபோல் இருக்கிறது. இதோ நீங்களே பாருங்களேன். ஒருநிமிடம் ஆச்சர்யப்பட்டுப் போவீர்கள்.