நிழல் நுட்பம் (ShadeSmart) மற்றும் கதிரியக்கக் குளிரூட்டும் தொழில்நுட்பங்கள் கட்டிடங்களில் ஆற்றல் திறனுள்ள குளிரூட்டலை ஊக்குவிக்கின்றன

0
449
Thermal parameters being measured during Comfort Audit of Radiant Cooled Buildings

நிழல் நுட்பம் (ShadeSmart) மற்றும் கதிரியக்கக் குளிரூட்டும் தொழில்நுட்பங்கள் கட்டிடங்களில் ஆற்றல் திறனுள்ள குளிரூட்டலை ஊக்குவிக்கின்றன

புதுதில்லி, ஆகஸ்ட் 06, 2020

இந்திய கட்டிடத்துறை எரிசக்தி செயல்திறனின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளது, ஆனால் இது கட்டுமானத்துறையில் இன்னும் திறம்பட ஒருங்கிணைக்கப்படவில்லை. இந்தியாவின் காலநிலை மாற்ற மண்டலங்களில் நுட்பமான, சக்திவாய்ந்த நிழல் நுட்பக் கருவிகள் அறையை குளிர்ச்ச்சியாக வைக்க உதவுவதுடன், குறைந்த சக்தியில் இயங்கக்கூடிய காற்று சீரமைப்பிற்கான கருவிகளை உருவாக்குவதால், நாட்டின் ஆற்றல் செயல்திறனை முன்னேற்ற உதவும். அதுவும் நாட்டின் பெரும்பகுதி வெப்பமயமாக இருப்பதால் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

எரிசக்தி மற்றும் வளங்கள் நிறுவனம் (TERI) இந்திய அரசு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து, குடியிருப்பு ஜன்னல்களுக்கும், வணிகக் கட்டிடங்களுக்கும் புதிய வெளிப்புற நிழல் நுட்பத் தீர்வை, திறன் வாய்ந்த மற்றும் வசதியான வாழ்விட மாதிரித் திட்டத்தின் கீழ் .உருவாக்கியுள்ளது. “நிழல் நுட்பம்” (Shadesmart) என்று பெயரிடப்பட்ட இந்த நிழல் அமைப்பு ஏர் கண்டிஷனிங் மற்றும் லைட்டிங் ஆகியவற்றில் குறைந்த மின் நுகர்வுடன் உட்புற வசதியை அடைவதற்கான ஒரு புதுமையான மற்றும் செலவு குறைந்த தீர்வாக உருவாக்கப்பட்டுள்ளது.

ALSO READ:

ShadeSmart & Radiant cooling technologies promote energy-efficient cooling in buildings