தயாரிப்பாளர் நந்தகோபால் செட்டியார் காலமானார்

0
306

தயாரிப்பாளர் நந்தகோபால் செட்டியார் காலமானார்

பட தயாரிப்பாளர், கில்டு சங்க பொருளாளருமான நந்தகோபால் செட்டியார் இன்று காலமானார். அவரது மறைவுக்கு இயக்குனர், சென்னை காஞ்சிபுரம். திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர்சங்க தலைவரும், தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் சங்க கவுரவ ஆலோசகருமான டி.ராஜேந்தர் இரங்கல் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

திரைப்பட விநியோகஸ்தரும், பைனான்சியரும், எனது மகன் சிலம்பரசன் டி,ஆர் நடித்த சபாஷ் பாபு படத்தின் தயாரிப்பாளரும், தென் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் கில்டு அமைப்பின் பொருளாளரும், எனது நீண்ட கால நண்பருமான திரு நந்தகோபால் செட்டியார் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்.

அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலை கூறி கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு டி.ராஜேந்தர் கூறி உள்ளார்.