‘தமிழ் கற்போர் எண்ணிக்கை வெளிநாடுகளில் அதிகரிக்கிறது’ – மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!

0
79

‘தமிழ் கற்போர் எண்ணிக்கை வெளிநாடுகளில் அதிகரிக்கிறது’ – மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!

வெளிநாடுகளில் தமிழ் கற்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மோடி பெருமிதம். பிஜி நாட்டில் எட்டு தசாப்தங்களுக்குப் பிறகு பயிற்சி பெற்ற தமிழாசிரியர்கள் மூலம் தமிழ் மொழி கற்பிக்கப்படுகிறது என்று மோடி தெரிவித்தார்.

வெளிநாடுகளில் தமிழ் மொழி கற்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்த வருடத்தின் இறுதி மனதின் குரல் நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு ஒளிபரப்பானது. இதில் பேசிய பிரதமர் மோடி, “பல வெளிநாடுகளில் தமிழ் கற்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்திய அரசு உதவியுடன் பிஜி நாட்டில் தமிழ் மொழி கற்பிக்கும் திட்டம் ஒன்று சென்ற மாதம் தொடங்கப்பட்டுள்ளது. 80 ஆண்டுகளில் முதல் முறையாக பயிற்சி பெற்ற தமிழாசிரியர்கள் பிஜி நாட்டில் தமிழ் மொழி கற்பிக்கிறார்கள்.

தமிழ் உலகின் மிகவும் தொன்மையான மொழி என்பது நாம் அனைவரும் கர்வப்படும் விஷயமாக உள்ளது. நமது கலாச்சாரம் மொழிகள் இசை மற்றும் ஆயுர்வேதம் ஆகியவை உலகின் பல்வேறு நாடுகளிலே தடம் பதிப்பது பெருமை அளிக்கிறது” என்றார்.