தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா

0
375

தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா

தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த தயாரிப்பாளர் சங்கத்துக்கு தலைவராக பாரதிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்துக்குத் தேர்தல் நடத்தியே நிர்வாகிகளைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதில் பாரதிராஜா உறுதியாக இருந்தார். அந்த தேர்தலுக்கு கே.விஜயகுமார் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

தேர்தல் அதிகாரி அறிக்க்கையில் கூறியதாவது:

தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்கத்தைத் (TFAPA) தோற்றுவித்து அதில் அங்கத்தினர்களாக இருக்கும் திரு T. சிவா மற்றும் திரு. G. தனஞ்ஜெயன் ஆகியோரது அழைப்பின் பேரில் TFAPA-வின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நடக்கவிருக்கும் தேர்தலை மேற்பார்வையிடும் தேர்தல் அதிகாரியாக 28.8.2020 அன்று நடைபெற்ற ‘ஜூம்’ (ZOOM) வாயிலாக நடைபெற்ற வருடாந்திரப் பொதுக் குழுக் கூட்டத்தில் (AGM) நான் பொறுப்பேற்றேன்.

பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியவுடன் TFAPA-வின் விதிகளின்படி 2020 முதல் 2022 வரையிலான நிர்வாகக்குழு, நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென உறுப்பினர்களிடன் நான் கூறினேன்.

விதி 28-ன் படி ஆன்லைன் வழி நடக்கும் கூட்டங்களும் நிகழ்வுகளும் அதிகாரபூர்வமானவையே என்றும் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் ‘ஜூம்’ கூட்டமும் அத்தகைய ஒன்றே என்பதால் தேர்தல் நடத்தும் அதிகாரமும் அதற்கு உண்டு. வேறு உறுப்பினர்களுக்குக் காட்டுவதற்காகவும் சென்னையில் உள்ள சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் சட்டரீதியான ஃபைலிங்குகள் (Filing) செய்வதற்கும் இந்த பதிவு பேருதவியாக இருக்கும்.

விதி 1(E)-யின் படி பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளத் தேவைப்படும் தகுதி அனைவருக்கும் உள்ளதாகவும் அவ்வாறு தகுதியுள்ள உறுப்பினர்கள் மட்டுமே பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்பட்டுள்ளதாகவும் நான் உறுப்பினர்களிடம் தெரிவித்தேன். நமது ஆவணங்களின்படி இதுவரை பதிவுசெய்துள்ள 50 முதன்மை (PRIMARY) உறுப்பினர்கள் மட்டும் அழைக்கப்பட்டனர். இதை விதி 1(e)-உடன் சேர்த்துப் பார்க்கையில், கூட்டங்கள் மற்றும் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையும் முதன்மை உறுப்பினர்களுக்கு உண்டு.

விதி 43-ல் கூறியுள்ளபடி குறைந்தது 25% முதன்மை உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் கூட்டமே அதிகாரபூர்வமானது என்பதையும் உறுப்பினர்கள் எண்ணிக்கை 38-ஐத் தாண்டிவிட்டதால் (இது வரை இணைந்துள்ள 50 உறுப்பினர்களில் 25%-க்கும் மேல்) தேர்தலுக்கான நடவடிக்கைகளைத் தொடங்கலாம் என்றும் உறுப்பினர்களிடம் நான் கூறினேன். விதி 14-இன்படி பொதுக்குழு வாக்களித்து 7 நிர்வாகிகள் அடங்கிய ஒரு ஆட்சி மன்றக் குழுவையும் (பிரிவுகள் பற்றிய விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன) 12 உறுப்பினர்கள் அடங்கிய நிர்வாக / பொதுக்குழுவையும் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டேன்.

பிரிவு வாரியான அலுவலக நிர்வாகிகளின் விவரம் பின்வருமாறு:
அ)​ தலைவர் – 1
ஆ)​ பொதுச் செயலாளர் – 1
இ)​ துணைத் தலைவர்கள் – 2
ஈ)​ பொருளாளர் – 1
உ) ​இணைச் செயலாளர்கள் – 2

சங்கத்தைத் தோற்றுவித்து உறுப்பினர்களாகத் தொடரும் திரு. பாரதிராஜா, திரு T.G. தியாகராஜன், திரு T. சிவா, திரு. G. தனஞ்ஜெயன், திரு. S.R. பிரபு, திரு. S.S. லலித்குமார், திரு. சுரேஷ் காமாட்சி ஆகியோர் கீழுள்ள ஒவ்வொரு நிர்வாகிப் பதவிகளுக்கும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதை அனைத்து உறுப்பினர்களிடமும் தெரிவித்தேன். விதி 15-இல் குறிப்பிடப்பட்டுள்ள போட்டியிடும் தகுதியை சரிபார்த்து, போட்டியாளர்களின் விண்ணப்பங்கள் சரியானவை என்று உறுதிசெய்து கொண்டதும், பின்வரும் பதவிகளுக்காகப் போட்டியிடுவோரின் விவரங்களை நான் அறிவித்தேன்:

அ)​ தலைவர் – திரு. P. பாரதிராஜா
ஆ)​ பொதுச் செயலாளர் – திரு T. சிவா
இ)​ துணைத் தலைவர்கள் – (1) திரு. G. தனஞ்ஜெயன் (2) திரு. S.R. பிரபு
ஈ)​ பொருளாளர் – திரு T.G. தியாகராஜன்
உ)​ இணைச் செயலாளர்கள் – (1) திரு. S.S. லலித்குமார் (2) திரு. சுரேஷ்
காமாட்சி

மேலுள்ள வேட்பாளர்களுக்கு எதிராக ஏதாவது பதவி(களு)க்காக கூட்டத்தில் இருப்போர் யாராவது போட்டியிட விரும்பினால் தெரிவிக்கலாமென நான் உறுப்பினர்களிடம் கூறினேன். ஆனால் தங்களுக்குப் போட்டியிடும் எண்ணம் இல்லையென உறுப்பினர்கள் ஏகமனதாகத் தெரிவித்ததுடன் மேலே உள்ள அனைவரும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதைத் தாங்கள் ஒப்புக்கொண்டதாக அறிவித்தனர். வேட்பாளார் யாரும் போட்டியிடாததால் மேலுள்ள அனைவரும் இரண்டாண்டுகளுக்கு (29.8.2020 முதல் 28.8.2022 வரை) அந்தந்தப் பதவிகளுக்குப் போட்டியின்றித் தேர்வாகிவிட்டதாக ஏகமனதாக நான் அறிவித்தேன். பொதுக்குழுவும் இதற்குத் தன் ஒப்புதலை அளித்தது.

12 உறுப்பினர்கள் கொண்ட நிர்வாகக் குழுவைத் தேர்ந்தெடுக்கும் வேலையை நான் தொடங்கினேன். அதுவரை போட்டியிட யாரும் விருப்பத் தெரிவிக்காத காரணத்தால், தாமாக முன்வந்து பெயர் கொடுத்து போட்டியிடுமாறு நான் அவர்களிடம் கூறினேன். பின்னர் பொதுக்குழுக் கூட்ட உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடத் தனது விருப்பத்தை கீழுள்ள 12 பேர் மட்டும் தெரிவித்தனர்; அவர்களது பெயரும் தயாரிப்பு நிறுவனங்களின் பெயர்களும் கீழ்வருமாறு:

1.​   திரு. S. நந்தகோபால் (மெட்ராஸ் எண்டர்ப்ரைஸஸ்)
2.​   திரு. P. மதன் (எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ்)
3.​   திரு. C. விஜயகுமார் (திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்)
4.   ​திரு. ராஜ்சேகர கற்பூரசுந்தரபாண்டியன் (2D எண்டர்டெயின்மெண்ட்)
5.​   திரு. G. டில்லி பாபு (ஆக்ஸெஸ் ஃபிலிம் ஃபேக்டரி)
6.​   திரு. கார்த்திகேயன் சந்தானம் (ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ்)
7.​   திரு. R. கண்ணன் (மசாலா பிக்ஸ்)
8.   ​திரு. சுதன் சுந்தரம் (பேஷன் ஸ்டுடியோஸ்)
9.​   திரு. விஜய் ராகவேந்திரா (ஆல்-இன் பிக்சர்ஸ்)
10.​ திரு. I.B. கார்த்திகேயன் (பிக் ப்ரிண்ட் பிக்சர்ஸ்)
11.​ திரு. நிதின் சத்யா (ஷ்வேத் க்ரூப்)
12. ​திரு. P.G. முத்தையா (P.G. மீடியா ஒர்க்ஸ்)

போட்டியிட முன்வந்தவர்கள் 12 பேர் மட்டுமே என்பதாலும் குறிப்பிட்ட எண்ணிக்கையை மீறி யாரும் போட்டியிட முன்வரவில்லை என்பதாலும் 2020 முதல் 2022 வரை TFAPA-வின் பொதுக்குழுவுக்கு 12 பேரும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர் என்ற முடிவை நான் அறிவித்தேன். இதைப் நிர்வாகக் குழுவும் ஒப்புக்கொண்டது.

தேர்தல் பணியானது மேலே கூறியவாறு முழுமையாகவும் திருப்தியாகவும் செய்துமுடிக்கப்பட்டு எனது தேர்தல் பணியை நான் முடித்துவிட்டதால் இதற்குப் பின் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளும் பொதுக்குழுவும் வேலையைக் கவனிப்பர் என்ற நம்பிக்கையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு என் வாழ்த்துக்களை கூறிவிட்டு, TFAPA-வின் விதிகளின்படி நிர்வாகக் குழு கூட்டத்திலிருந்து நான் வெளியேறினேன்.

கே. விஜயகுமார்
தேர்தல் அதிகாரி
தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்கம்