தங்கம் விலை 3-வது நாளாக குறைவு; ஒரு சவரன் தங்கம் ரூ.40,104-க்கு விற்பனை

0
257

தங்கம் விலை 3-வது நாளாக குறைவு; ஒரு சவரன் தங்கம் ரூ.40,104-க்கு விற்பனை

சென்னை, கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக சர்வதேச பொருளாதார சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. கடந்த ஜூலை மாத இறுதியில் ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை 41 ஆயிரம் ரூபாயைக் கடந்தது.

இந்த நிலையில் 3-வது நாளாக தங்கம் விலை சரிவை சந்தித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து 1,832 -ரூபாய் குறைந்து, ரூ.40,104-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ 229 குறைந்து ஒரு கிராம் 5,013- ஆக விற்பனையாகிறது. கடந்த 4 நாட்களில் தங்கத்தின் விலை ரூ.2,400-வரை குறைந்துள்ளது.