டி20 உலகக்கோப்பை போட்டி அட்டவணை வெளியீடு: இந்தியா முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதல்…!

0
105

டி20 உலகக்கோப்பை போட்டி அட்டவணை வெளியீடு: இந்தியா முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதல்…!

சிட்னி, 2022 ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இதற்கான போட்டி அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. 16 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் இந்தியா உள்பட 12 அணிகள் நேரடியாக குரூப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. எஞ்சிய 4 அணிகள் தகுதிச்சுற்றுகளில் வெற்றிபெற்று குரூப் சுற்றுக்குள் நுழைய உள்ளன.

இந்நிலையில், ஐஐசி 20 டி உலகக்கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, குரூப் சுற்றுக்குள் நுழைவதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் அக்டோபர் 16-ம் தேதி தொடங்குகிறது.

அதன் பின்னர், அக்டோபர் 22-ம் தேதி சனிக்கிழமை டி20 உலகக்கோப்பையின் லீக் சுற்றுப்போட்டிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது. லீக் சுற்றின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா எதிர்கொள்கிறது.

அதேவேளை, இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டி அக்டோபர் 23-ல் மெல்பெர்ன் எம்சிஜி மைதானத்தில் நடைபெறுகிறது.

டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி நவம்பர் 13 ஞாயிற்றுக்கிழமை மெல்பெர்ன் எம்சிஜி மைதானத்தில் நடைபெறுகிறது.