டாவோ மருத்துவ பள்ளி பி.எஸ் மருத்துவ படிப்பிற்கான இணையதள வகுப்புகளுக்கான தொடக்க நிகழ்ச்சி சென்னையில் தொடங்கப்பட்டது
டாவோ மருத்துவ பள்ளி பி.எஸ் மருத்துவ படிப்பிற்கான இணையதள வகுப்புகளுக்கான தொடக்க நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம் காணொலிக்காட்சி வாயிலாகவும், நடிகரும் இயக்குனருமான எஸ்.வி. சேகர் நிகழ்ச்சியிலும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும், பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து பல பிரமுகர்களையும் இணைக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
டாவோ மருத்துவ பள்ளி அறக்கட்டளையானது பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சிறந்த மருத்துவப் பள்ளியாகும். இந்த மருத்துவப் பள்ளி கடந்த 10 ஆண்டுகளில் வெளிநாட்டு மருத்துவ பட்டப்படிப்பு தேர்வுகளில் (FMGE) சிறந்த தரவரிசைகளை கொண்ட மாணவர்களை உருவாக்கி உள்ளது. இதில் கடந்த ஆண்டு முதல் 10 இடங்களுள் 7 முதலிடங்களைக் பெற்றுள்ளது. இந்த கல்வி முறையில் தேசிய அளவிலான தேர்ச்சி விகிதம் 21% ஆக இருந்தபோதும், டாவோ மருத்துவப் பள்ளி அறக்கட்டளையின் தேர்ச்சி விகிதமானது 82% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ALSO READ:
Davao Medical School Foundation Inc along with Transworld Educare Launched in Chennai
டாவோ அறக்கட்டளையில் தற்போது பிலிப்பைன்ஸில் 5 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். முன்னதாக சுமார் 2 ஆயிரத்து 800 மாணவர்கள் கல்லூரியில் பட்டம் பெற்றுள்ளனர். இதில் பல மாணவர்கள் உலகம் முழுவதும் பணியாற்றி வருகின்றனர்.
இதுகுறித்து மருத்துவக் கல்விக்கான வெளிநாட்டுக் கல்வியின் முன்னோடிகளில் ஒருவரும், டாவோ தலைமை நிர்வாக அதிகாரியுமான டாக்டர் டேவிட் கே பிள்ளை பேசும்போது, “குற்றச்சம்பவங்கள் அதிகம் நடைபெறாத, அதிகம் ஆங்கிலம் பேசக்கூடிய மக்கள் வசிக்கும் சிறந்த வெப்பமண்டல சூழலை கொண்ட பிலிப்பைன்ஸில் உள்ள மிகச்சிறந்த மருத்துவப் பள்ளிகளில் டாவோ மருத்துவ பள்ளி அறக்கட்டளையும் ஒன்றாகும். இங்கு பல நாடுகளில் உள்ள நோய்களைப் பற்றி மாணவர்கள் கற்றுக்கொள்கின்றனர்”, என்றார்.
மேலும் தொடர்ந்த அவர், “இந்த இன்டர்நேஷனல் ப்ரீ மெட் இணையதள வகுப்புகள் மாணவர்களால் மிகவும் வரவேற்கத்தக்கவையாக மாறியுள்ளன. இந்த கடினமான கொரோனா தொற்று பரவல் காலத்தில் மாணவர்களுக்கு ஒரு சிறந்த கற்றல் தளமாக மாறியுள்ளது”, என்றார்.
இதில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர் எஸ்.வி.சேகர் பேசுகையில், “ரூ.18 லட்சத்தில் முழுமையான வெளிநாட்டு மருத்துவக்கல்வியை டாவோ மருத்துவப்பள்ளி வழங்குவது பாராட்டிற்குரியது. கொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதில் உள்ள அறிவியல் பூர்வமான கருத்தை பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் அரசு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். பிலிப்பைன்ஸில் ஆங்கில மொழியிலான மருத்துவக் கல்விமுறை பலருக்கும் உபயோகமானதாக உள்ளது”, என்றார்.
காணொலிக்காட்சி மூலம் கலந்து கொண்ட முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம் பேசுகையில், “வெளிநாட்டு மருத்துவக்கல்வியில் சிறப்பான பங்களிப்பை டாவோ மருத்துவப்பள்ளி வழங்கி வருகிறது. இது பாராட்டத்தக்கது”, என்றார்.
டாவோ மருத்துவப் பள்ளி மிகக் குறைந்த கட்டணத்தில் மாணவர்களுக்கு சிறந்த கல்வியையும், லட்சியங்களையும் நிறைவேற்ற உதவுகிறது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மலிவு விலையில் கல்வியை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.