டாக்டர் வி சாந்தா மறைவுக்கு பிரதமர் இரங்கல்

0
201

டாக்டர் வி சாந்தா மறைவுக்கு பிரதமர் இரங்கல்

புதுதில்லி, ஜனவரி 19, 2021 

   டாக்டர் வி சாந்தாவின் மறைவுக்கு பிரதமர்  நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

  பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரையில், “புற்றுநோய்க்கு தரமான சிகிச்சை அளிப்பதை உறுதி செய்வதற்காக டாக்டர் வி சாந்தா ஆற்றிய அரும் பணிகளுக்காக அவர் என்றும் நினைவு கூரப்படுவார்.

   ஏழை மக்களுக்கும், நலிந்தவர்களுக்கும் சிகிச்சை அளிப்பதில் சென்னை அடையாறில் உள்ள  புற்றுநோய் மருத்துவமனை முன்னணியில் இருக்கிறது .

    2018-ல் அந்த மருத்துவமனைக்கு  நான் சென்றதை நினைவு கூருகிறேன். டாக்டர் வி சாந்தாவின் மறைவினை அறிந்து துயருற்றேன். ஓம் சாந்தி” என்று தெரிவித்துள்ளார்.