ஜூனியர் ஆண்கள் உல​க​க்கோப்பை ஹாக்கி போட்டி: இந்திய அணிக்காக  விளையாட கோவில்பட்டி S.மாரீஸ்வரன் தேர்வு

0
217

ஜூனியர் ஆண்கள் உக்கோப்பை ஹாக்கி போட்டி: இந்திய அணிக்காக  விளையாட கோவில்பட்டி S.மாரீஸ்வரன் தேர்வு

ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு சார்ந்த S. மாரீஸ்வரன் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி விளையாட்டு வீரர். வருகிற நவம்பர் 24 முதல் டிசம்பர் 5 வரை நடைபெற உள்ள ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் பங்குபெற இந்திய அணிக்காக விளையாடுவதற்கு இந்திய அளவில் 24 வீரர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவரை சென்னையில் இன்று தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி.கனிமொழி கருணாநிதி அவர்கள் வாழ்த்து தெரிவித்து ஊக்கத்தொகை வழங்கி ஒடிசா புவனேஸ்வரில் நடைபெற உள்ள பயிற்சி முகாமிற்கு அனுப்பி வைத்தார். உடன் ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு தலைவர் திரு.சேகர் மனோகரன் மற்றும் துணை செயலாளர்கள் Olympian.திருமாள்வளவன், D.கிளமென்ட்.