செப்டம்பர் 19 முதல் நவம்பர் 8 வரை ஐபிஎல் நடைபெறும்: ஐபிஎல் சேர்மன் அறிவிப்பு!

0
285

செப்டம்பர் 19 முதல் நவம்பர் 8 வரை ஐபிஎல் நடைபெறும்: ஐபிஎல் சேர்மன் அறிவிப்பு!

இந்த வருட ஐபிஎல் போட்டி, செப்டம்பர் 19 முதல் நவம்பர் 8 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என ஐபிஎல் சேர்மன் அறிவித்துள்ளார்.

இந்த வருட ஐபிஎல் போட்டி, செப்டம்பர் 19 முதல் நவம்பர் 8 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என ஐபிஎல் சேர்மன் அறிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், ஐபிஎல் போட்டி என பல முக்கியமான கிரிக்கெட் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

கொரோனா நோய்த் தொற்று பாதிப்பால் 2020 ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ முதலில் அறிவித்தது. இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக் கோப்பை அடுத்த வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் போட்டி, செப்டம்பர் 19 முதல் நவம்பர் 8 வரை நடைபெறும் என ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் படேல் அறிவித்துள்ளார். ஐபிஎல் போட்டி பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பும் அட்டவணையும் ஐபிஎல் கவுன்சில் கூட்டத்துக்குப் பிறகு அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.