சென்னைக்கு இத்தனை பெருமை இருக்கிறதா? – ஆச்சரியத்தில் விஜய் சேதுபதி

0
499

சென்னைக்கு இத்தனை பெருமை இருக்கிறதா? – ஆச்சரியத்தில் விஜய் சேதுபதி

சென்னை தினத்தையொட்டி முழு ஊரடங்கில் சர்வதேச புகைப்பட கலைஞர் எல்.ராமச்சந்திரன் எடுத்த ‘சென்னை முதல் மெட்ராஸ் வரை’ அரிய புகைப்படங்களை  இந்து என்.ராம், நடிகர் விஜய் சேதுபதி, நடிகர் பார்த்திபன், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்,  காவல் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் வெளியிட்டனர்.

கடந்த 1639 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி சென்னை உருவானதாக கூறப்படுகிறது. இதனை கொண்டாடும் விதமாக கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் சென்னை தினம் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு சென்னை தினம் 22ஆம் தேதி கொண்டாடப்படும் வகையில் சென்னையின் புராதான கட்டங்கள், சென்னையின் அழகியல் பேசும் புகைப்படங்கள் கொண்ட சென்னை 2 மெட்ராஸ் புகைப்பட புத்தக வெளியீட்டு விழா சென்னை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள தி ஆர்ட் வளாகத்தில் நடைபெற்றது.

ஊரடங்கின் போது பிரபல புகைப்பட கலைஞர் எல்.ராமசந்திரன் எடுத்த புகைப்படங்கள் புத்தகமாக வடிவமைக்கப்பட்டிருந்தன.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடிகர் விஜய சேதுபதி, ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஆகியோர் புகைப்பட தொகுப்பை வெளியிட்டனர். இந்து என்.ராம் மற்றும் காவல் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தொகுப்பை பெற்றுக் கொண்டனர். இயக்குனர் பார்த்திபன் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

ஊரடங்கு நேரத்தில் சென்னையின் அழகை பல விதங்களில் புகைப்பட கலைஞர் எல்.ராமச்சந்திரன் படம் பிடித்துள்ளார். மொத்தம் 450 அரிய புகைப்படங்களை தொகுப்பாக வெளியிட்டுள்ளார். பல ஆண்டுகளுக்கு பின்னால் சென்னை எப்படி இருந்ததோ அதேபோன்ற காட்சிகளை கருப்பு வெள்ளையில் பதிவு செய்துள்ளார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட இந்து என்.ராம் பேசியதாவது:-

மெட்ராஸ் பெயர் எப்படி வந்தது என பல கருத்துக்கள் உள்ளன. இருப்பினும் தெளிவான முடிவுகள் இல்லை. ஊடகங்கள் தான் உள்ளன. அது அப்படியே இருப்பதும் நல்லது தான். சென்னை உண்மையிலேயே ஆடம்பரம் அல்லாத எளிமையான நகரம். சென்னை நகரம் இசை நகரமாக உள்ளது. நாட்டிலேயே வாழ சிறந்த நகரமாக சென்னை உள்ளது. சென்னை நகரின் பழமையை காட்டும் வகையில் ராமச்சந்திரன் புகைப்படங்களில் பதிவு செய்துள்ளார். கருப்பு புகைப்படங்களாக அதை வெளியிட்டுள்ளது மேலும் அழகாக உள்ளது.

நிகழ்சியில் காவல் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் பேசியதாவது:-

சென்னை அந்த காலத்தில் எப்படி இருந்ததோ அதேபோல் எல்.ராமச்சந்திரன் புகைப்படத்தில் தெரிகின்றது. 360 டிகிரியை தாண்டி ஒரு வாழ்க்கை உள்ளது. அதை ராம் பதிவு செய்துள்ளார்.

நிகழ்சியில் இயக்குனர் பார்த்திபன் பேசியதாவது:-

ஊரடங்கு 6 மாதம் கடந்து போனது. அதில் பல பேருக்கு 5 மாதம் ஆகியுள்ளது. இதில் பயனுள்ள ஒன்றாக எல்.ராமச்சந்திரன் சென்னை புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். பெண்ணை ஆண் ரசிப்பது போல் எல்.ராமச்சந்திரன் சென்னையை ரசித்து உள்ளார். லைட்டுக்காக அவர் காத்திருக்கிறார். ராம் எதையும் லைட்டாக எடுத்துக் கொள்ள மாட்டார். ஸ்ட்ராங்காத்தான் செய்வார். சிறப்பான புகைப்படங்களை  கொடுத்துள்ளார்.

நிகழ்சியில் விஜய் சேதுபதி பேசியதாவது:-

எல்.ராமச்சந்திரன் லாக் டவுனில் செய்த இரண்டு நல்ல விஷயம். ஒன்று சென்னையை புகைப்படம் எடுத்துள்ளார். அடுத்து என்னை புகைப்படம் எடுத்துள்ளார். சென்னையின் புகைப்படங்களை பார்கும்போது சென்னைக்கு இத்தனை பெருமை இருக்கிறதா? என ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக உள்ளதாக தெரிவித்தார்.

சென்னையில் பல பொக்கிஷமான இடங்கள் உள்ளன. அதை ராம் பதிவு செய்துள்ளார். காலத்தை கடந்து பின்னால் சென்று புகைப்படம் எடுத்தது போல் உள்ளது. அறிவு தான் கடவுள். அதுவே நம்மை பாதுகாக்கும். புகைப்படமும் நமக்கு அறிவை கொடுக்கிறது. அதன் மூலமாகவும் நாம் கற்றுக் கொள்ள முடியும் என குறிப்பிட்ட விஜய் சேதுபதி ஊரடங்கால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதில் இருந்து மீண்டும் மீண்டுவரவேண்டும் எனவும் கூறினார்.

நிகழ்சியில் எல்.ராமச்சந்திரன் பேசியதாவது:- 

உலகில் உள்ள பல முக்கிய இடங்களையும் ஊரடங்கு நேரத்தில் நான் சென்னையில் பார்த்தேன். நான் பார்க்க மறந்த , தவறிய இடங்களை நான் பதிவு செய்துள்ளேன். உலகிலேயே உள்ள முன்னணி கட்டிடங்கள் , நிறுவனங்கள் சென்னையில் உள்ளன. சென்னை உயர் நீதிமன்றம் 127 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது. கூவம் ஆறு, கொசஸ்தலை ஆறு, மியூசியம், கண் மருத்துவமனை இப்படி பல அழகான இடங்களை பதிவு செய்துள்ளேன்.

ALSO READ:

Celebrating World Photography Day with Chennai to Madras book launched by Actor Vijaysethupathi