“சென்னைக்கு அருகே இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும்” – வானிலை மையம்

0
99

“சென்னைக்கு அருகே இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும்” – வானிலை மையம்

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் இருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் 170 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதாகவும், இது சென்னைக்கு அருகே கரையைக் கடக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புதுவையிலிருந்து கிழக்குத் திசையில் 170 கிலோமீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தென்மண்டல வானிலை மைய தலைவர் பாலச்சந்திரன் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகரும் வேகம் 27 கி.மீட்டரில் இருந்து தற்போது 21 கிமீ ஆக குறைந்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது 40 – 45 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். பொதுமக்கள் வெளியே வர வேண்டாம்” என்று கூறியுள்ளார்.