கேரளாவில் ஒமைக்ரான் அலை – மாநில சுகாதாரத்துறை தகவல்

0
117
கேரளா சுகாதார மந்திரி வீனா ஜார்ஜ்

கேரளாவில் ஒமைக்ரான் அலை – மாநில சுகாதாரத்துறை தகவல்

திருவனந்தபுரம் : ஜனவரி 27ம் தேதி நிலவரப்படி மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் கேரளாவில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு சிகிச்சைக்கு பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கேரளாவில் ஒமைக்ரான் தொற்று விகிதம் குறித்து சுகாதார மந்திரி வீனா ஜார்ஜ் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

கேரளாவில் கொரோனா தொற்று பரிசோதனை மாதிரிகளில் 94 சதவீதம் ஒமைக்ரான் பாசிட்டிவ்வாக உள்ளது. 6 சதவிகிதம் டெல்டா வைரஸ் பாசிட்டிவ். கேரளாவில் மூன்றாவது அலை ஓமிக்ரான் அலை என்பது தெளிவாகிறது. மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 4 சதவீதத்திற்கும் குறைவானவர்களே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

அவர்களில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கு ஆக்ஸிஜன் படுக்கைகள் தேவைப்படுகிறது. 0.6 சதவீத கொரோனா நோயாளிகளுக்கே அவசர சிகிச்சை பிரிவு தேவைப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.