கருப்பு மாஸ்க் அணிந்து குடும்பத்துடன் காரில் பயணிக்கும் அஜித்.. (வீடியோ)

0
332

கருப்பு மாஸ்க் அணிந்து குடும்பத்துடன் காரில் பயணிக்கும் அஜித்.. (வீடியோ)

நடிகர் அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். கொரோனா அச்சுறுத்தலால் படத்தின் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் திரைப்பட படப்பிடிப்புகளுக்கு அரசு அனுமதி வழங்கினாலும் கொரோனா பிரச்னை முழுவதுமாக முடிந்த பின்பு ‘வலிமை’ திரைப்பட ஷூட்டிங்கை தொடங்கலாம் என்று அஜித் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரிடம் தெரிவித்ததாகவும், தொழில்நுட்ப கலைஞர்கள், சினிமா தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டே அவர் இந்த முடிவை எடுத்ததாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.

லாக்டவுன் காலத்தில் தனது குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட்டு வரும் அஜித், கடந்த மே மாதத்தில் தனது மனைவியுடன் மருத்துவனை சென்ற வீடியோ வெளியாகி வைரலானது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உடல் பரிசோதனை செய்து கொள்ளும் அஜித், அதற்காகத்தான் மருத்துவமனை சென்றிருந்தார் என்றும் அப்போது அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது அஜித் தனது மனைவி ஷாலினியுடன் காரில் ஏறிச் செல்லும் வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் தலையில் தொப்பி, முகத்தில் கருப்பு நிற மாஸ்க் அணிந்தபடி இருக்கிறார் அஜித்.

லாக்டவுன் காலத்தில் ரஜினிகாந்த் கேளம்பாக்கம் சென்றது, நடிகர் விஜய் மரக்கன்று நட்டு போட்டோ வெளியிட்டதைப் போல அஜித்தின் சமீபத்திய வீடியோ வெளியாகியிருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.