கமல்ஹாசன் படம் பொறிக்கப்பட்ட பனியன்கள் பறிமுதல்!

0
269

கமல்ஹாசன் படம் பொறிக்கப்பட்ட பனியன்கள் பறிமுதல்!

கமல்ஹாசன் படம் பொறிக்கப்பட்ட பனியன்கள் மற்றும் டிஃபன் பாக்ஸ்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கடலூர் – புதுவை சாலையில் பெரிய காட்டு பாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, கடலூரை நோக்கி வந்த மினி லாரியை சோதனை செய்தபோது, அதில் மூன்று மூட்டைகளில் கமல்ஹாசன் படம், மக்கள் நீதி மய்யத்தின் பேட்டரி டார்ச் சின்னம் பொறிக்கப்பட்ட பனியன்களும், மேலும் மூன்று மூட்டைகளில் சில்வர் டிஃபன் பாக்ஸ்களும் இருந்தது தெரியவந்தது. ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட இந்த பொருட்களை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர், கடலூர் கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர். தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு விநியோகிக்க கொண்டு செல்லப்பட்டதா என விசாரணை நடைபெற்று வருகிறது.