கடலில் மீன்வளத்தை பெருக்கும் வகையில் பச்சை வரி இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன
சென்னை,
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் நிதியுதவியுடன், “தமிழ்நாட்டின் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதியில், பச்சை வரி இறால் குஞ்சுகளை, பொரிப்பகங்களில் வளர்த்து, கடலில் விடுதல்” என்ற திட்டத்தின் கீழ், 08.02.2023 (புதன்கிழமை) இன்று, 3.2 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகள், மரைக்காயர்பட்டினம், மன்னார் வளைகுடா கடற்பகுதியில் கடலில் விடப்பட்டது. மண்டபம் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய தலைவர், டாக்டர் ஜி. தமிழ்மணி முன்னிலையில் கடலில் விடப்பட்டன. திட்டம் துவங்கியதிலிருந்து (பிப்ரவரி, 2022), இதுவரை 47.24 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகள் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் விடப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியை, மண்டபம் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய மூத்த விஞ்ஞானி, டாக்டர் பி. ஜான்சன் ஒருங்கிணைத்தார்.