“ஒன்றிணைவோம்..மாணவர்களோடு துணை நிற்போம்” – நடிகர் சூர்யா வெளியிட்ட வீடியோ

0
261

“ஒன்றிணைவோம்.. மாணவர்களோடு துணை நிற்போம்” – நடிகர் சூர்யா வெளியிட்ட வீடியோ

நடிகர் சூர்யாவிடம் கல்விக்காக நிதியுதவி கேட்டு 3000 பேர் விண்ணப்பித்துள்ளார்கள்.

நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் அக்டோபர் 30-ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாக இருக்கிறது. இத்திரைப்படத்தின் வெளியீட்டு நிதியிலிருந்து ரூ.5 கோடியை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முன்கள பணியாளர்களுக்கும் வழங்குவதாகவும் அறிவித்தார்.

ரூ.5 கோடியில் ரூ.1.50 கோடியைத் திரையுலக சங்கங்களுக்கு அளித்துள்ளார் சூர்யா. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமும் சேவையும் செய்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவத்துறை பணியாளர்கள் மற்றும் கொரோனா காலத்தில் களத்தில் நின்று பணியாற்றிய காவல்துறையினர், பத்திரிகையாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மயான பணியாளர்கள் ஆகியோரின் குடும்பத்தில் கல்வி பயில்பவர்களுக்கு 2.5 கோடி ரூபாயை கல்வி ஊக்கத் தொகையாக வழங்க முடிவு செய்திருக்கிறோம்.

ஐந்து கோடி ரூபாயில் 2.5 கோடி ரூபாய் எனது திரைக்குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு சிறுபங்களிப்பாக வழங்க தீர்மானிக்கப்பட்டது. அதில் 1.5 கோடி ரூபாய் திரைப்படத் தொழிலாளார்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் சங்க அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டது.

 

மேலே குறிப்பிட்ட அமைப்புகளின் உறுப்பினர்கள் அல்லாத, திரையுலகைச் சார்ந்த அன்புக்குரிய விநியோகஸ்தர்கள், மீடியேட்டர்கள், பிரதிநிதிகள், மக்கள் தொடர்பாளர்கள் (PRO), திரையரங்க தொழிலாளர்கள் மற்றும் எனது நற்பணி இயக்கத்தை சார்ந்தவர்களுக்கு 1 கோடி ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களின் குடும்பத்தில் பள்ளி/கல்லூரியில் பயில்கிறவர்களுக்குப் பத்தாயிரம் ரூபாய் கல்வி ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.” என்றும் சூர்யா தெரிவித்தார்.

இந்நிலையில் சூர்யாவிடம் கொரோனா காலக் கல்வி உதவி கோரி இதுவரை 3000 பேர் விண்ணப்பம் செய்துள்ளார்கள். இத்தகவலை சூர்யா தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், ஒருவர் படித்தால் அந்த வீடு மாறும். ஒவ்வொருவரும் படித்தால் அந்த நாடே மாறும். இந்தப் பொருளாதார நெருக்கடியில் பல மாணவர்கள் தங்களது கல்வியைக் கைவிட்டுள்ளார்கள். நாம் நினைத்தால் மாற்ற முடியும் என்று கூறியுள்ளார்.