உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள்: டுவைன் ஜான்சன் முதலிடம், பட்டியலில் உள்ள ஒரே இந்திய நடிகர் அக்‌ஷய்குமார் 6-வது இடம்

0
298

உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள்: டுவைன் ஜான்சன் முதலிடம், பட்டியலில் உள்ள ஒரே இந்திய நடிகர் அக்‌ஷய்குமார் 6-வது இடம்

2020-ஆம் ஆண்டுக்கான, உலக அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் 48.5 மில்லியன் டாலர் சம்பளத்துடன் பாலிவுட் நடிகர் அக் ஷய்குமார் ஆறாவது இடத்தில் உள்ளார், இந்த பட்டியலில் உள்ள ஒரே இந்திய நடிகர் இவர்தான்.

2020-ஆம் ஆண்டுக்கான அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலை  ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய நடிகர் பாலிவுட் நட்சத்திரம் அக் ஷய் குமார் மட்டுமே. முதல் 10 இடங்களை பெற்றுள்ள பட்டியலில் டுவைன் ஜான்சன், மார்க் வால்பெர்க், ரியான் ரெனால்ட்ஸ், ஆடம் சாண்ட்லர், பென் அஃப்லெக், வின் டீசல், ஜாக்கி சான், வில் ஸ்மித் மற்றும் லின்-மானுவல் மிராண்டா ஆகியோர் அடங்குவர்.
இந்த பட்டியலில் டுவைன் ஜான்சன் தொடர்ந்து இரண்டாவது முறையாக  முதலிடத்தில் உள்ளார். மல்யுத்த வீரராக இருந்து நடிகராக மாறிய இவர்  2020 ஆம் ஆண்டில் 87.5 மில்லியன் டாலர்களை சம்பளமாக பெற்றுள்ளார். இந்த பட்டியல் 2019-ஆம் ஆண்டு ஜூன் 1 மற்றும் 2020-ஆம் ஆண்டு  ஜூன் 1 க்கு இடையில் நடிகர்கள் பெற்ற வருவாயின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது.