இரா. ஜவஹர் மறைவு – சென்னை நிருபர்கள் சங்கம் இரங்கல்

0
170

இரா. ஜவஹர் மறைவு – சென்னை நிருபர்கள் சங்கம் இரங்கல்

மே 28, 2021, சென்னை:

மூத்த பத்திரிகையாளர் தோழர் இரா. ஜவஹர் (வயது 73) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்ற செய்தி

மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையும் அளிக்கிறது. அவரது மறைவிற்கு சென்னை நிருபர்கள் சங்கம் (Madras Reporters Guild)  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

தோழர் இரா. ஜவஹர் கம்யூனிஸ்ட் கட்சியின் மீதும், கொள்கை மீதும் தீராத பற்றுக் கொண்டவர். அவர் எழுதிய “கம்யூனிஸம் – நேற்று இன்று நாளை” என்ற நூல் இன்றும் பல இளம் கம்யூனிஸ்ட்டுகளுக்கு கலங்கரை விளக்கமாக திகழ்கிறது. “சர்வதேச மகளிர் தினத்தின் உண்மை வரலாறு” என்ற ஆய்வு நூல், ‘ஒரு மார்க்சியப் பார்வை’ உள்ளிட்டு இடதுசாரி சித்தாந்த கருத்துக்கள் அடங்கிய பல நூல்களையும் எழுதியுள்ளார்.

முரசொலி, ஜுனியர் போஸ்ட், நக்கீரன், தமிழன் எக்ஸ்பிரஸ், தினமணி போன்ற பத்திரிகைளில் பணியாற்றியவர். ஏராளமான கட்டுரைகளையும் எழுதியவர்.

கடந்த சில ஆண்டுகளாகவே இருதய அறுவை சிகிச்சை மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார். அவரது மறைவு இடதுசாரி முற்போக்கு எழுத்தாளர்களுக்கும், பத்திரிகை உலகிற்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.

தமிழக அரசு தோழர் ஜவஹரின் குடும்பத்திற்கு நிவாரண நிதியை வழங்குமாறுக் கேட்டுக்கொள்கிறோம்.

சென்னை நிருபர்கள் சங்கம்:  தலைவர் (ஆர். ரங்கராஜ்) 9841010821 செயலாளர்  (து. சேகர்)  98409 07292