இன்று கேளம்பாக்கம் பண்ணை வீட்டிற்குச் செல்ல இ-பாஸ் எடுத்த ரஜினிகாந்த்

0
601

இன்று கேளம்பாக்கம் பண்ணை வீட்டிற்குச் செல்ல இ-பாஸ் எடுத்த ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் காரில் சென்றது போன்ற ஒரு படம் வெளியானது. அவர் கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு தனது மகள், மருமகனுடன் சென்றது உறுதிப்படுத்தப்பட்டது. அதன்பின் அவர் சென்னை போயஸ் கார்டன் திரும்பிவிட்டார்.

தற்போது கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திச் செல்ல இ-பாஸ் எடுப்பது அவசியம. கேளம்பாக்கம் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருப்பதால், ரஜினிகாந்த் இ-பாஸ் எடுத்திருக்க வேண்டும்.

சென்னை மாநகராட்சி ஆணையர் பேட்டியளித்தபோது, ரஜினிகாந்த் இ-பாஸ் எடுத்தாரா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. ஒருவருடையை தனிப்பட்ட பயணம் குறித்து உடனடியாக பதில் கூற முடியாது. ஆய்வு செய்து அதன்பிறகு தெரிவிக்கப்படும் என்றார்.

இந்நிலையில் இன்று கேளம்பாக்கம் செல்ல ரஜினிகாந்த் இ-பாஸ் எடுத்துள்ளார். அவருக்கும் டிரைவர் கணபதிக்கும் இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது. மருத்துவம் தொடர்பாக செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு முன் செல்லும்போது எடுத்தாரா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

Also Read:

ரஜினிகாந்த் சொகுசு காரில் சென்றது எங்கே தெரியுமா?